என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death of conductor"

    • பழனி அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணியாற்றுகிறார்.
    • படுகாயமடைந்த வசந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் மதுரா ஈராடி என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் பழனி (வயது 45).இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணியாற்றுகிறார். இவரது மனைவி வசந்தி (35).   இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் செஞ்சியை அடுத்த மேற்கலவாய் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வசந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×