விக்கிரவாண்டி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலி

மாரி நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது. டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி அருகே டிராக்டர் மோதி முதியவர் பலி
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே கரும்புடிராக்டர்மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி(70) விவசாயி.இவர் நேற்று இரவு ஒரத்தூர் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர்மீது டிராக்டர் சக்கரம் தலையின் மேல் ஏறியதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் பலியான மாரி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com