என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு2 நாள் சிறப்பு முகாம்
- 3,4 ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
- நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
விழுப்புரம்:
விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் விண்ணப்பம் அளிப்பதற்கு ஒவ்வொரு நியாயவிலை அங்காடியினையும் ஒரு அலகாக கொண்டு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக 24.07.2023 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சுமார் 1027 முகாம்கள் நடத்தப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ள இயலாமல் விடுபட்ட பயனாளிகள் தங்களின் விண்ணப்பங்களை அளித்திட ஏதுவாக 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும் 2வது கட்டமாக வரும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் உட்பட) தொடர்ந்து சுமார் 2,77,315 குடும்ப அட்டைதாரர்களுக்கு 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 01.08.2023 முதல் விண்ணப்பங்கள் ஒவ்வொரு தெருவாரியாக நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






