கண்டமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
கண்டமங்கலம் பகுதியில்  நாளை மின் நிறுத்தம்
Published on

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com