search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sound Service Job"

    • கார்த்தி மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.

    விழுப்புரம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார். இவர் மரக்காணம் அருகேயுளள கோமுட்டி சாவடிகுப்பத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி, மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக் சென்றார். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×