என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
- மணிப் பூர் அரசையும் டிஸ்மிஸ் செய்யக்கோரி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்த வர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த, மணிப் பூர் அரசையும் டிஸ்மிஸ் செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட் சி விழுப்புரம் மாவட்ட மகளிர் அமைப்பு சார்பில் திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும்மாவட்ட மகளிர் விடுதலை இயக்கம்துணை அமைப்பாளருமான ஷீலா தேவி சேரன்தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நகரமன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகர செயலாளர் இமையன்,மாவட்ட பொருளாளர் திலீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொகுதி பொறுப்பாளர் வக்கீல் பூபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






