திண்டிவனம் மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் இறந்து கிடந்த முதியவர்: போலீசார் விசாரணை

மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது.தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் இறந்து கிடந்த முதியவர்: போலீசார் விசாரணை
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் கார்டில் சிவாஜி, மன்னார்சாமி தெரு, வசந்தபுரம், திண்டிவனம் என்று உள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து போனவர் மேற்கண்ட விலாசத்தை சேர்ந்தவரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாதையில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com