என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். காதல் ஜோடியான 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும் வேலூர் கோட்டை பூங்காவில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    கோட்டை பூங்காவில் சிலர் கும்பலாக மது குடிப்பது கஞ்சா என்ற போதை பொருள் பயன்படுத்தி வருகின்றனர். போதையில் அவர்கள் புல்வெளியில் படுத்து விடிய விடிய தூங்குகின்றனர்.

    காதல் ஜோடி தனிமையில் இருந்த இடத்தின் அருகே வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் (18), சக்தி (18), அடைமணி (18) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்தனர்.

    3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம்பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.

    பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.

    இதனையடுத்து இளம்பெண்ணை கத்தியால் மிரட்டி 3 பேரும் கற்பழித்தனர். அப்போது அவர் அலறி கூச்சலிட்டார். இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கினர். முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    காதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் இளம்பெண்ணின் காதலனிடம் விசாரணை நடத்தினர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் இளம்பெண்ணின் காதலனை கற்பழிப்பு நடந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கும்பல் எப்படி தாக்கினர்.

    எந்த இடத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார் என காதலன் கூறினார். இதன் மூலம் கும்பல் பூங்காவில் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    வேலூர் தெற்கு காவல் நிலையம் கோட்டை பின்புறம் உள்ள பெங்களூர் சாலை மக்கான் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் சிக்கினார். அவனிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது.

    இதையைடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வசந்தபுரத்தில் பதுங்கி இருந்த சக்தி, அடைமணி ஆகியோரை பிடித்தனர். 3 பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார்.

    கடையில் வேலை பார்க்கும் போது அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதால் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நேற்று இரவு காதல் ஜோடி இருவரும் வேலூர் கோட்டை பூங்காவில் தனியாக சந்தித்து பேச முடிவு செய்தனர்.

    அதன்படி இரவு வேலை முடிந்ததும் அவர்கள் 9.50 மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். பூங்காவின் ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை 3 பேர் கும்பல் நோட்டமிட்டனர். 3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.

    பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.

    இதனையடுத்து இளம்பெண்ணை கும்பல் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கியது. முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் வடக்கு போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

    அண்ணா சாலையை ஒட்டிபொதுமக்கள் போலீசார் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் கிரீன் சர்க்கிளில் காட்பாடி செல்லும் பாதையில் விபத்து தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிக்னல் விழுந்தவுடன் வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    கிரீன் சர்க்கிளில் இருந்து காட்பாடி செல்லும் பாதையில் ஒரு சில வாகனங்கள் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் எதிர்த்திசையில் செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்று கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையில் எதிர்த் திசையில் சென்றது.

    அப்போது பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் அந்த பஸ் மீது மோதி படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

    மேலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனையடுத்து கிரீன் சர்க்கிளில் இருந்து காட்பாடி செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இன்று காலை தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    இதனால் வாகனங்கள் சீராக வந்து செல்கின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    வேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் கன்சால் பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். (வயது 36) ஆட்டோ டிரைவர். வேலூர் சாரதி மாளிகை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி செல்வி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வேலூர் சேண்பாக்கம் பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்த மைக்கேல் (வயது 27). இவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பரத் மைக்கேல் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பரத் புதியதாக வீடு கட்டி வந்தார். நேற்று காலை அவரது வீடு கிரகபிரவேசம் நடந்தது. சிறிது நேரம் கழித்து பரத் பெரியார் நகர் சென்றார்.

    அப்போது அங்கிருந்த மைக்கேலுடன் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஏற்பட்டது.  பின்னர் பரத் அங்கிருந்து சில அடி தூரம் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் சரிந்து விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத மைக்கேல் தொடர்ந்து இரும்பு கம்பியால் தாக்கினார்.  

    இதனால் பரத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மைக்கேலை கைது செய்தனர்.

    கிரகப்பிரவேசம் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 13-ந்  தேதி ஆட்டோ டிரைவர் அய்யப்பன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.
    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று காட்பாடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
    காட்பாடி:

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

    அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

    டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், முதலில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிகழ்வின் மூலம், காங்கிரஸ் தலைமை மீது தி.மு.க. அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

    இதற்கிடையே, கட்சித் தலைமை கே.எஸ்.அழகிரியை கண்டித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென அவசர அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். 

    இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் கேஎஸ் அழகிரி கூறும்போது:- 

    எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சியில் சில பகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்பட வில்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் ஆதங்கத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தற்போது கூட பொங்கல் வாழ்த்து கூறியுள்ளேன். 
    கேஎஸ் அழகிரி
    இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப் போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம்? கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் அது வாக்கு வங்கியை பாதிக்காது என்று கூறியுள்ளார்.
    வேலூர் மாவட்டம், காட்பாரி வட்டத்தில் உள்ள பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்திலும், சோளிங்கர் வட்டத்திலும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. அப்போது பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கயப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:-

    வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்தில் இருக்கும் பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கயப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல சுமார் 40 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

    அதேவேளையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை சுமார் 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலும், காட்பாடி வட்டத்தில் இருந்து பிரித்து சோளிங்கர் வட்டத்திலும், காட்பாடி ஒன்றியத்தில் இருந்து பிரித்து சோளிங்கர் ஒன்றியத்திலும் சேர்க்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டத்தில் இருந்த வேலம் கிராமம், புதிதாக உருவாக்கப்பட்ட சோளிங்கர் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த கிராமத்தில் இருந்து சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் 26 கி.மீ. தூரத்தில் உள்ளது. வாலாஜாப்பேட்டை வட்டத்தில் வேலம் கிராமத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, பட்டா பெயர் மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 321 மனுக்கள் அளிக்கப்பட்டன. அப்போது கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    வேலூர் சைதாப்பேட்டையில் மதுபாட்டில் உடைத்ததால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். அவருடைய மகன் அய்யப்பன் (வயது 29). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று மாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முன் நின்று கொண்டிருந்தார் .

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். அய்யப்பன் அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். அவரை மர்ம கும்பல் விரட்டி கத்தியால் குத்தினர்.

    இதில் அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். இதைத் தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் சைதாப்பேட்டை முருகன் கோவில் பின்புறம் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது.

    மது விற்பனையாளர்கள் நேரடியாக களமிறங்காமல் மூதாட்டியை வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் மது விற்பனை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது சைதாப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் மது வாங்கினர்.

    அவர்கள் மது வாங்கிய போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அவர்கள் மூதாட்டியிடம் தகராறு செய்தனர்.

    அப்போது அய்யப்பன் மூதாட்டிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனையடுத்து அவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அய்யப்பன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் சைதாப்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கூலி உயர்த்தி வழங்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதனையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 406 கூலி வழங்கப்படும்.

    இதில் பி.எப்.இ., எஸ்.ஐ., பிடித்தது போக ரூ.320 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்படி துப்புரவு தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து துப்புரவு ஊழியர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கூலி உயர்வு வழங்கக் கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தால் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகளில் காலை 9 மணி வரையிலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எறியவிட்டு செல்கின்றன.

    பனி மூட்டம் கடுமையாக இருந்தாலும் வாகனங்களின் வேகம் குறையவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் இயக்கப்படுகின்றன. கடும்பனி வாகனங்களின் அதிக வேகத்தால் இன்று சென்னை நோக்கி சென்ற 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மனந்தாங்கல் மேம்பாலத்தில் இன்று காலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிலாரி மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது.

    இதனையடுத்து அதனை நிறுத்தி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 2 லாரிகள் அந்த மினி லாரி மீது மோதியது.

    அதனை தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று விபத்தில் சிக்கியிருந்த லாரிகள் மீது மோதி நின்றது. அந்த நேரத்தில் சென்னை நோக்கி 6 கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அதில் முன்னால் வந்த கார் பனி மூட்டத்தால் லாரியை கவனிக்காமல் கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    அதன் பின்னால் வந்த 5 கார்களும் அடுத்தடுத்து மோதின. ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்து முடிந்துவிட்டது 6 கார்களின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

    அதில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்து வலியால் கூச்சலிட்டனர்.

    நெடுஞ்சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாலாஜா போலீசார் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து வாணியம்பாடி வந்து கொண்டிருந்த அமைச்சர் நிலோபர் கபில் காரை நிறுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

    விபத்தில் ஆற்காடு, திமிரியை சேர்ந்த மகாலிங்கம் (வயது 46) வெட்டுவானத்தை சேர்ந்த பாலு (23), சேலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), குடியாத்தத்தை சேர்ந்த சதீஷ் (28), முத்து (32), கோவையை சேர்ந்த சதீஷ் பாபு (42), வாணியம்பாடி முல்லை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28), ஆற்காட்டை சேர்ந்த யுவராஜ் (32), விஜயகுமார் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றும் சிலர் லேசான காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் விபத்தில் வேலூரில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற பங்களாதேஷ் தம்பதி சிக்கினர். விமானத்தில் செல்ல வேகமாக செல்ல வேண்டும் என அவர்கள் உதவி கேட்டனர்.

    அமைச்சர் நிலோபர் கபில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் வேறு கார் வரவழைத்து பங்களாதேஷ் தம்பதியை சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.12 ஆயிரத்துடன் கலெக்டர் ஆபீஸ் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மனு கொடுப்பதற்காகவேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (வயது65) வந்திருந்தார். அவர் வைத்திருந்த மஞ்சள் நிற துணி பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.12000 கட்டாக சுருட்டி வைத்திருந்தார். அவர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் மனு கொடுத்தார். அப்போது நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுக்கு முன்புகூலி வேலை செய்து பணம் சேர்த்து வந்தேன். பழைய 500 ரூபாய் நோட்டுகளை தலையணைக்கு அடியில் மறைத்து வைத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன்.

    இந்த நிலையில் வீட்டு வாடகைக்காக அந்த பணத்தை எடுத்து கொடுத்த போது இந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். நேற்றுதான் இது எனக்கு தெரியவந்தது. இதனால் நான் செய்வதறியாது உள்ளேன். 500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

    இந்த  பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி தந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார். இதுபற்றி வங்கி அதிகாரியிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகளை எதுவும் செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மூதாட்டியை ஒரு ஓரமாக அதிகாரிகள் அமர வைத்திருந்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளதால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. லாங்கு பஜாரில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கரும்பு, பொங்கல் பானை, காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    கடந்தாண்டை போலவே கரும்பு விலையில் பெரிய மாற்றம் இல்லை. 18 முதல் 20 கரும்புகள் இருக்கும் ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. சிதம்பரம் ,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கரும்புகள் வேலூரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    பொங்கல் பானை ரூ.30 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. திருஷ்டி பூசணி 1 கிலோ ரூ.15 வரையும், பனை கிழங்கு 1 கட்டு ரூ.100, கருணைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.40, வெங்காயம் கிலோ ரூ.40, சின்ன வெங்கயாம் ரூ.150, தக்காளி கிலோ ரூ.25,-க்கு விற்பனையாகிறது.

    வேலூர் மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. அதன் விவரம் (கிலோ ரூ.) வருமாறு:- உருளைக்கிழங்கு ரூ.30, கத்தரிக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.60, அவரைக்காய் ரூ.50, வெண்டக்காய் ரூ.30, முருங்கைகாய் ரூ.250, கேரட் ரூ.60, வள்ளிக்கிழங்கு ரூ.30, பிடிகருணை, வெத்தலை வள்ளி ரூ.40க்கும் விற்கப்படுகிறது.

    லாங்கு பஜாரை போலவே நேதாஜி மார்க்கெட், வேலூர் மற்றும் காட்பாடி உழவர் சந்தைகள், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விற்பனைகளை கட்டியுள்ளது.

    இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது. பஜார் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.
    ஜோலார்பேட்டை :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் 2 மாதம் பரோல் முடிந்த நிலையில் நேற்று பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க மகனை வழியனுப்பினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2 மாதம் பரோல் முடிந்து இன்று (நேற்று) என் மகன் சிறைக்கு செல்கிறார். எனது மகன் எங்களோடு பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். இந்த பொங்கலுக்கு எங்களுடன் இருப்பார் என ஆசைபட்டோம். வருகிற 21, 22-ந் தேதிகளில் பேரறிவாளனை மருத்துவமனையில் சேர்க்கும் நிலையில் உள்ளது.

    5 நாட்களாக நாங்கள் காவேரி மருத்துவமனையில் இருந்தோம். நாங்கள் மறுபடியும் பரோல் நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். 3 நாட்களுக்கு முன் வரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்காததால் மருத்துவமனையில் இருந்து மகனோடு ஒரு நாளாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்துவிட்டோம்.

    எனது மகன் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஏனென்றால் மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதா என் கையை பிடித்துக்கொண்டு உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். அந்த நம்பிக்கை இன்னும்தொடர்ந்து உள்ளது.

    இந்த அரசு எனது மகன் விடுதலைக்கு விரைந்து முடிவெடுக்கும் என கோரிக்கை வைக்கிறேன். எனது மகனுடன் கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை.

    எனது மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகுனுடைய விடுதலையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
    ×