search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கொலை"

    • நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் பார்த்திபன். (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கருப்பையா (வயது 55). இவருக்கும் ஆட்டோ டிரைவரான பார்த்திபனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பார்த்திபன் பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது கருப்பையா அதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அதனை தொடர்ந்து கருப்பையா, அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த பார்த்திபனின் தம்பியும் காயமடைந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை போலீசார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே பார்த்திபன் இறந்த செய்தி அறிந்ததும் போலீசார் கருப்பையாவை தேடிவந்த நிலையில் அவர் தானாக முன்வந்து தென்கரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கருப்பையாவின் மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த பார்த்திபனின் தம்பி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.
    • கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலை மான் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சங்கு கண்ணன் (வயது 27). அதே பகுதியில் ஆட்டோ டிரைவாக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகாத சங்கு கண்ணன் தனது பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சங்கு கண்ணனை நோக்கி வந்தனர். உடனே அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வீட்டிற்குள் ஓட முயன்றார்.

    ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சங்கு கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

    உடனே மர்ம நபர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கு கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொழில் போட்டியில் சங்கு கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிலைமான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் விடியல் (வயது30). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஆண்டு சதிஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று வந்தார்.

    நேற்று இரவு விடியல், தனது ஆட்டோவில் வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விடியலை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிஷி, சுர்ஜித், கபில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் நேற்று முன்தினம் கபில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து சென்று உள்ளார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் விடியல் கபிலிடம் தகராறில் ஈடுபட்டார். நீ என்ன பெரிய ரவுடியா, கருப்பு நிற வேட்டி அணிந்து செல்கிறாய் என்று கூறி கபிலை அடித்து நடுரோட்டில் முட்டி போட வைத்ததாக தெரிகிறது.

    இதற்கு பழிவாங்க கபில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர்.
    • கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (வயது 37). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சத்யா. இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு சதீஷ் (2) மகன் உள்ளார்.

    நேற்று மாலை சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வரவேண்டும் என்று செல்போன் அழைப்பு வந்தது. இதனை நம்பிய சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

    அதன்பின்னர் இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்யா செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஒலித்து கொண்டே இருந்தது. போனை சிவமணி எடுக்கவில்லை.

    பதறி போன சத்யா தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இன்று காலை சிவமணி எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சருகில் பிணமாக கிடந்தார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிவமணியின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அதோடு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போலபரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

    இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் சவாரிக்கு அழைத்த செல்போன் அழைப்பு குறித்து துப்பு துலக்கினர். அப்போது கடைசியாக சிவமணியிடம் செல்போனில் பேசியது ஒரு பெண் என தெரிய வந்தது.

    உடனே போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அந்த பெண் மாயமாகி விட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை மடக்கி பிடித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.

    எனினும் சிவமணி எதற்காக கொலை செய்யபட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், கூலிபடையினரால் சிவமணி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணி என்ற வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மணி வீட்டில் இருந்து வைகை வடகரை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அருள்தாஸ்புரம் வைகை ஆற்றங்கரை பகுதியில் மணி நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    உடனே அந்த கும்பல் துரத்தி சென்று மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இன்று அதிகாலை அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.
    • இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை, செனாய் நகர் வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). ஆட்டோ டிரைவர்.

    கடந்த 2010-ம் ஆண்டு அமைந்தகரை, மாங்காளி அம்மன் கோவில் அருகே சவாரி ஏற்றுவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்த மோதலில் செல்வக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி கருணாநிதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    ×