என் மலர்
வேலூர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த செதுக்கரை விநாயகாபுரம் தெருவை சேர்ந்தவர் சந்திரன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 51). நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் குடியாத்தம் டி.எஸ்.பி. ஆபிஸ் அருகே பைக்கில் கணவன், மனைவி வந்துகொண்டிருந்தனர். அப்போது பின்னாடி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் பைக்கை விரட்டி சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டில் மறைந்து பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். டி.எஸ்.பி. அலுவலகம் அருகே நகை பறிப்பு சம்பவம் நடந்ததுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க இரவு முழுவதும் ரோந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
குடியாத்தம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பயம் ஆட்டிப்படைக்கிறது. மேலும் இது சம்மந்தமான வதந்திகளும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குடியாத்தம், பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 18) மற்றும் சுண்ணாம்பு பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோரின் புகைப் படங்களை தனித்தனியாக வைத்து செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு அதில் அந்த வாலிபர்கள் படத்தை வைத்து இந்த வாலிபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வீடியோ கிளிப்பிங், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரவியது.
அதனை பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் போலீசில் புகார் அளித்தனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் துணை கொண்டு இந்த போலியாக வீடியோ கிளிப்பிங் செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை சிவகாமி அம்மன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜயன் (19), ராஜா கோவில் கிராமத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), செதுக்கரை பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் விஜயன் பாதிக்கப்பட்ட திவாகரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாட்டாகவும் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதற்காகவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மேலும் இது சம்பந்தமான வதந்திகளும் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களின் புகைப்படங்களை தனித்தனியாக வைத்து செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்-அப், முகநூலில் பரவியது.
இதனை பார்த்து பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் இதுபோல் தவறான வதந்திகள் பரப்புவது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வீடியோ கிளிப்பிங் போலியாக தயார் செய்து அனுப்பியதாக சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு போலியாக வீடியோ கிளிப்பிங் செய்தவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமி அம்மன் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவன் விஜயன் (வயது 19), காந்திநகரை அடுத்த ராஜா கோவில் கிராமத்தைச் சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), செதுக்கரை பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் விஜயன் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாட்டாகவும், பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதற்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போலீசார் கூறுகையில் வாட்ஸ்-அப் களில் வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.
வேலூர்:
வேலூர் அரசு தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நூலகராக தாமோதரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளை தூய்மைப்பணி செய்வதற்காக நூலகத்திற்கு வரவழைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நூலகரின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது. அவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் மீண்டும் புகார் அளித்தனர். இதனையடுத்து நூலகர் தாமோதரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கை அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நூலகர் தாமோதரன் வேண்டுமென்றே மாணவிகளை தனியாக நூலகத்தை சுத்தம் செய்ய அழைத்து செல்வார்.
அப்போது செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூற கூடாது என மிரட்டியுள்ளார். இதனை அவர் 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்ததாக தெரிகிறது.
இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூலகர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம்.
போலீசார் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரை திரும்ப பெறும்படி கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டுகிறது.
நூலகர் தாமோதரனை கல்லூரிக்கு வரவழைத்து மாணவிகள் முன்பாக அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பயம் ஆட்டிப்படைக்கிறது. மேலும் இது சம்மந்தமான வதந்திகளும் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குடியாத்தம்- பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஆகியோரின் புகைப்படங்களை தனித்தனியாக வைத்து இந்த வாலிபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் வீடியோ கிளிப்பிங் பரவியது.
அதனை பார்த்த பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் இருந்த அந்த வாலிபர்களின் படத்தை எடுத்து வீடியோ கிளிப்பிங் தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் தவறான வதந்திகள் பரப்பி வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் வத்சலா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த வீடியோ கிளிப்பிங் போலியாக தயார் செய்து அனுப்பியது நெல்லூர்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் காட்பாடி வனச்சரக காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து கடந்த சில மாதங்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
குடியாத்தம் அருகே உள்ள கீழ் கொல்லப்பள்ளி கிராமத்திலுள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 15 காட்டு யானைகள் புகுந்தன.
அங்கிருந்த மா வாழை மரங்களை பிடுங்கி வீசி நாசம் செய்தன.
இதனையடுத்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். நேற்று இரவு தனகொண்டபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன.
சங்கர் என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன. வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோர பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் இவருடைய மகன் அருண் (வயது 20). மேல் விசாரத்தில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இன்று காலை லத்தேரி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் அருண் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் முட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தால் காட்பாடி குடியாத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மதுக்கடை, பார்களையும் வரும் 31-ந்தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 192 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலன் கருதி, வேலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமே தனது சொந்த செலவில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை முன்னதாகவே வாங்கி வைத்து அவற்றை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.
அதன்படி முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை ஒரு மாதத்துக்கு தேவையான அளவுக்கு வழங்கியுள்ளது.
அவற்றை முறையாக பயன்படுத்தி முன் எச்சரிக்கையாக இருக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் முக கவசம், கையுறை அணிந்து மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பியுள்ளனர்.
இந்த வதந்தியால் சிக்கன் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ 30 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.
ஆனாலும் பொதுமக்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் சிக்கன் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று ஆம்பூரில் ஒரு கிலோ ரூ 30 க்கு விற்பனை செய்யப்பட்டது அதனையும் யாரும் வாங்கவில்லை.
இதனால் ஆம்பூர் உமர் சாலை பகுதியில் ஆம்பூர் சிக்கன் சென்டர் மற்றும் சாந்தி சிக்கன் சென்டர் கடைக்காரர்கள் ஒன்றிணைந்து மக்களிடையே சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்பதை எடுத்துரைக்க முடிவு செய்தனர்.
இதற்காக வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடைகளில் நேற்று இலவசமாக பிரியாணியும் சிக்கன் 65 வழங்க ஏற்பாடு செய்தனர். உமர் சாலையில் சாமினா பந்தல் அமைத்தனர். இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு பேனர் வைத்தனர்.
இதைக்கண்டு பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கினர்.
பொதுமக்கள் கொரோனா பீதியை புறந்தள்ளிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிபோட்டு சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர்.
சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பிரியாணி சாப்பிட்டு சென்றனர். கடை முன்பு கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் உமர் சாலை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாடியை சேர்ந்தவர் சுகுமார் விவசாயி. இவரது மனைவி மோனிஷா (வயது 22). கர்ப்பிணியான மோனிஷாவை மேல்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கிருந்து பிரசவத்திற்காக நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் நகர பகுதியில் உள்ள வேலப்பாடி மெயின் ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மோனிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்சு உதவியாளர் சுகன்யா அவருக்கு பிரசவம் பார்த்தார்.
அப்போது ஆம்புலன்சில் மோனிஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் மோசூர் என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.
நேற்று மாலை சோதனை சாவடி அருகே அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றார்.
இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரை பைக்கில் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாலாஜா அடுத்த ராமாபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 21) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.
மேலும் ஏற்கனவே அவர் 1 பைக்கை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 பைக்குகளை மீட்டு போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை ஜெயிலில் அடைத்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர் வணிக வளாகங்கள் மூடவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2850 தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 17 சினிமா தியேட்டர்களில் இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 23 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மொத்தம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 51 தியேட்டர்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.






