என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரக்கோணத்தில் 2 பைக்குகள் திருடிய வாலிபர் கைது

    அரக்கோணத்தில் 2 பைக்குகள் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் மோசூர் என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.

    நேற்று மாலை சோதனை சாவடி அருகே அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றார்.

    இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரை பைக்கில் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாலாஜா அடுத்த ராமாபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 21) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.

    மேலும் ஏற்கனவே அவர் 1 பைக்கை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 பைக்குகளை மீட்டு போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×