என் மலர்
வேலூர்
காட்பாடி அருகே வீடு புகுந்து திருடமுயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி மரகதம் (வயது 55). இவர் தபால் துறையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மரகதம் வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்குச் சென்று உள்ளார். மாலையில் வேலை முடிந்ததும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளேசென்று பார்த்தபோது மர்மநபர்கள் திருட முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகி என்ற மகேந்திரன், அபிஷேக், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
வேலூரில் தடையை மீறி நடந்த பா.ஜ.க. வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூரில் பா.ஜ.க.சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று மாலை மண்டி தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், ஓ.பி.சி.அணி மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசியலில் உள்ள கொரோனாவை அழிப்பது தான் தாமரையின் லட்சியம். பா.ஜ.க. எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்து மக்களை இழிவாகப் பேசினார்கள். அப்போது ஸ்டாலின் அமைதி காத்தார். இதற்கு தமிழக முதல் -அமைச்சர் மறுப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதுகுறித்து பேசவில்லை.
நாங்கள் யாரும் மனுஸ்மிருதி புத்தகத்தை பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை. எந்த தவறு இருந்தாலும் அதை சரி செய்யும் உரிமை இந்து மதத்துக்கு தான் உள்ளது. காலத்தால் எதுவெல்லாம் காலாவதி ஆகிறதோ அதை அந்தந்த மதத்தினரே தூக்கி எறிய வேண்டும். இதுவே முற்போக்கு சிந்தனை. பா.ஜ.க. தீண்டாமைக்கு எப்போதும் எதிராக நிற்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சாதி அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணையும் காலம் விரைவில் வருமே தவிர, என்றைக்கும் தாமரையை தமிழகத்தில் வீழ்த்த சாத்தியமில்லை.
காங்கிரஸ்-தி.மு.க. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்திற்கு எத்தனை மருத்துவ கல்லூரிகள் வந்தன. ஆனால் 2-வது முறை ஆட்சிக்கு வந்த மோடி அரசினால் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் வந்தன.
ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸும், தி.மு.க.வும் தான். ஆனால் அதை மீட்டது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தான். லஞ்சம், லாவண்யம் இல்லாத அரசு பா.ஜ.க.. முத்தலாக் தடை சட்டம் பெண்ணுரிமைக்காக கொண்டுவரப்பட்டது. நாங்கள் மதமாற்றத்தை மட்டுமே தடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், பொது செயலாளர்கள் ஆர்.ஜெ.பாஸ்கர், பாபு உள்பட 350-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி மண்டி வீதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டையில் தடையை மீறி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம், 10 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் 15-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 63), இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மகன் மதுரையில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்திரன் மற்றும் குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேவாலயத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அறை முழுவதும் ஆங்காங்கே துணிமணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சந்திரன், அவரின் குடும்பத்தினர் மற்றும் அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள், வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகை மாதிரிகளை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நடமாட்டத்தை மர்மநபர்கள் கடந்த சில நாட்களாக நன்கு நோட்டமிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன், குடும்பத்தினருடன் தேவாலயம் செல்வார் என்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் நேற்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அருகே லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு களத்துமேட்டுதெருவை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணிக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்தார். பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் நேற்று இரவு கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவை பழனிவேலு ஓட்டிச்சென்றுள்ளார். மேல்மொணவூர் அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி விட்டு 3 பேரும் கொணவட்டம் நோக்கி வந்துள்ளனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சதுப்பேரிக்கு செல்லும் அணுகுசாலையில் ஆட்டோவை நிறுத்திய பழனிவேலு எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தால் சுப்பிரமணி, கார்த்திக் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரும் பழனிவேலு உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.
வேலூர்:
வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது-
உள்ளாட்சி பதவிக்கான பாதி தேர்தலை நடத்திவிட்டு மீதி தேர்தலை நடத்தாமல் இருப்பது மிகப்பெரிய ஜனநாயக சிதைவு. மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும். ஒரு வேளை தேர்தல் நடத்தினால் அதில் தேர்வு செய்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்.
எனது நண்பரான ரஜினிக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரது உடல் நிலை குறித்து அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவரது உடல் நலன் முக்கியம். ஆனாலும் அவர் அரசியலுக்கு வந்து களம் காண ஜனவரி, பிப்ரவரியில் கூட வாய்ப்பு இருக்கிறது.
கட்சி தொடங்கி விரைவில் ஆட்சி அமைத்த சம்பவங்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திராவில் என்.டி.ஆர்.க்கும் நடந்துள்ளது. அரசியல் வருகை குறித்து ரஜினி தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தொடரும் என்று தான் போட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 7 பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை. பா.ஜ.கவுக்கும் தெளிவான கருத்து இல்லை. 7 பேர் விடுதலையில் முடிவெடுப்பவர்கள் மத்திய அரசுதான். இனியும் அவர்களை ஜெயிலில் வைத்திருப்பது சரியல்ல என்றார்.
அதிகாரம் கையில் இருந்தும் எதையும் செய்யாமல் அ.தி.மு.க. அரசு இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர்:
தி.மு.க. சார்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது.
அதன்படி வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் தொகுதி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க திட்டம் தீட்டியவர்களுக்கு அதை வென்று பாடம் புகட்டியுள்ளோம். ஒரு நொடி கூட ஆட்சியில் இருக்க தகுதியில்லாதது அ.தி.மு.க. அரசு. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இறந்ததாலும், சசிகலா ஜெயில் சென்றதாலும் ஆட்சிக்கு வந்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதிகாரம் கையில் இருந்தும் எதையும் செய்யாத அரசாக அ.தி.மு.க. உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட ரெயில்வே மேம்பாலம், சத்துவாச்சாரி தரைப்பாலம், வேலூர் ரிங் ரோடு, திருப்பத்தூரில் பாதாள சாக்கடை, பைபாஸ் ரோடு, காவிரி கூட்டுக்குடிநீர் ஆகிய திட்டங்கள் இன்னமும் முழுமை பெறவில்லை. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் வசதி கொண்டுவரவில்லை. அரக்கோணம் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து 9 ஆண்டுகள் ஆகியும் நிறைவேறவில்லை.
இது ஒருபுறமிருக்க தமிழர்களின் தாய்மொழி மற்றும் கலாசாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்க பார்க்கிறார்கள். ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்ற நினைக்கிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிகொண்டா அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே ராமாபுரம் சாலை உள்ளது. இந்த சாலையில் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியதில் 2 டிரைவர்கள் பலியானார்கள்.
ஆம்பூர்:
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி நேற்று அதிகாலை 6 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டயர் பஞ்சராகி நின்று விட்டது. அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
லாரி ரோட்டிலேயே நின்றதால் அந்த லாரி மீது மற்ற வாகனங்கள் மோதி விடாமல் இருப்பதற்காக டிரைவர் பாலையா (வயது 45) லாரியின் பின்புறம் நின்று டார்ச் லைட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து கர்நாடக பெல்காம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
இந்த லாரி, ஏற்கனவே பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஞ்சராகி நின்ற லாரி டிரைவர் பாலையா, மோதிய லாரியின் டிரைவர் கோபால் (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான 2 டிரைவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளரின் முன்ஜாமீன் மனுவை வேலூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
வேலூர்:
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் முறைகேடாக பணம் பெற்றதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மாதம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள அவரது வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து ரூ.3 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரம் மற்றும் 3½ கிலோ தங்க நகைகள், 6½ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவியின் வங்கி லாக்கரில் இருந்தும் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் வேலூர் தலைமை நீதித்துறை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம், தலைமை நீதித்துறை கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.147 கோடியே 26 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி வேலூர் கஸ்பா பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள நடைபாதை, கிரிக்கெட் மைதானம், பார்வையாளர்கள் அமரும் இடம், ஓடுதளம், நடைபாதை மற்றும் 300 பேர் அமரும் வகையில் அமைக்கப்படும் அரங்கத்திற்கான இடங்களையும், அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ரூ.46 கோடியே 51 லட்சம் மதிப்பில் 70 பஸ்கள் நிற்க கூடிய வகையில், பயணிகள் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுவதையும், அந்த பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் இரும்பு ராடுகள், சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவித்தனர்.
அருகில் ரூ.11 கோடி மதிப்பில் 42 கார்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தை பார்வையிட்டார். 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வர்ணம் பூசுகின்ற பணியை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது, முத்துமண்டபம் அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பொதுபாதை வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பின்னர் சர்க்கார் தோப்பு பகுதியில் ரூ.13 கோடியே 24 லட்சம் மதிப்பில் 2.40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள சோலார் மின் உற்பத்தி திட்ட பணிகளையும், ரூ.69 கோடியே 9 லட்சம் மதிப்பில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராகவேந்திரா நகர் பகுதியில் தலா ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்படும் 3 அங்கன்வாடி மைய பணிகள், வள்ளலார் பகுதியில் உள்ள அறிவியல் பூங்காவில் நடைபாதை, புது தரை அமைக்கும் பணிகள், சி.எம்.சி. மருத்துவமனை பின்பகுதியில் 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்படும் இடம் உள்பட மொத்தம் ரூ.147 கோடியே 26 லட்சம் மதிப்பில் நடைபெறும் பல்வேறு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், அரசு போக்குவரத்து கழக மேலாளர் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

கே.வி.குப்பம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது 38), தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜீவமணி கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் உள்பட 4 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து வந்தனர். தற்போது கொரோனா பரிசோதனையும் குறைந்துவிட்டது. கொரோனா தொற்றும் குறைந்துவிட்டது. குடியாத்தத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம், வேலூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். 65-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகாவில் வேலூர் மாநகராட்சிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று நோயாளிகள் அதிகம். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததால் கல்லூரியில் இருந்த சிறப்பு வார்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மட்டும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்றபின் மீண்டும் அரசு மருத்துவமனையில் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் பெண் டாக்டர், 2 செவிலியர்கள், ஒரு சுகாதார பணியாளர் என 4 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், தற்போது கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.