என் மலர்
செய்திகள்

வேலூர் மண்டித்தெருவில் பா.ஜ.க. சார்பில் நடந்த வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி
வேலூரில் தடையை மீறி பாஜக பொதுக்கூட்டம் - சிபி ராதாகிருஷ்ணன் உள்பட 350 பேர் கைது
வேலூரில் தடையை மீறி நடந்த பா.ஜ.க. வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூரில் பா.ஜ.க.சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று மாலை மண்டி தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், ஓ.பி.சி.அணி மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசியலில் உள்ள கொரோனாவை அழிப்பது தான் தாமரையின் லட்சியம். பா.ஜ.க. எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இந்து மக்களை இழிவாகப் பேசினார்கள். அப்போது ஸ்டாலின் அமைதி காத்தார். இதற்கு தமிழக முதல் -அமைச்சர் மறுப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதுகுறித்து பேசவில்லை.
நாங்கள் யாரும் மனுஸ்மிருதி புத்தகத்தை பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை. எந்த தவறு இருந்தாலும் அதை சரி செய்யும் உரிமை இந்து மதத்துக்கு தான் உள்ளது. காலத்தால் எதுவெல்லாம் காலாவதி ஆகிறதோ அதை அந்தந்த மதத்தினரே தூக்கி எறிய வேண்டும். இதுவே முற்போக்கு சிந்தனை. பா.ஜ.க. தீண்டாமைக்கு எப்போதும் எதிராக நிற்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சாதி அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணையும் காலம் விரைவில் வருமே தவிர, என்றைக்கும் தாமரையை தமிழகத்தில் வீழ்த்த சாத்தியமில்லை.
காங்கிரஸ்-தி.மு.க. 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்திற்கு எத்தனை மருத்துவ கல்லூரிகள் வந்தன. ஆனால் 2-வது முறை ஆட்சிக்கு வந்த மோடி அரசினால் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் வந்தன.
ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸும், தி.மு.க.வும் தான். ஆனால் அதை மீட்டது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தான். லஞ்சம், லாவண்யம் இல்லாத அரசு பா.ஜ.க.. முத்தலாக் தடை சட்டம் பெண்ணுரிமைக்காக கொண்டுவரப்பட்டது. நாங்கள் மதமாற்றத்தை மட்டுமே தடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், பொது செயலாளர்கள் ஆர்.ஜெ.பாஸ்கர், பாபு உள்பட 350-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி மண்டி வீதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டையில் தடையை மீறி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story