என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அதிகாரம் கையில் இருந்தும் எதையும் செய்யாமல் அ.தி.மு.க. அரசு இருக்கிறது- முக ஸ்டாலின்

    அதிகாரம் கையில் இருந்தும் எதையும் செய்யாமல் அ.தி.மு.க. அரசு இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
    வேலூர்:

    தி.மு.க. சார்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் தொகுதி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க திட்டம் தீட்டியவர்களுக்கு அதை வென்று பாடம் புகட்டியுள்ளோம். ஒரு நொடி கூட ஆட்சியில் இருக்க தகுதியில்லாதது அ.தி.மு.க. அரசு. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இறந்ததாலும், சசிகலா ஜெயில் சென்றதாலும் ஆட்சிக்கு வந்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதிகாரம் கையில் இருந்தும் எதையும் செய்யாத அரசாக அ.தி.மு.க. உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட ரெயில்வே மேம்பாலம், சத்துவாச்சாரி தரைப்பாலம், வேலூர் ரிங் ரோடு, திருப்பத்தூரில் பாதாள சாக்கடை, பைபாஸ் ரோடு, காவிரி கூட்டுக்குடிநீர் ஆகிய திட்டங்கள் இன்னமும் முழுமை பெறவில்லை. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் வசதி கொண்டுவரவில்லை. அரக்கோணம் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து 9 ஆண்டுகள் ஆகியும் நிறைவேறவில்லை.

    இது ஒருபுறமிருக்க தமிழர்களின் தாய்மொழி மற்றும் கலாசாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்க பார்க்கிறார்கள். ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்ற நினைக்கிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×