என் மலர்
வேலூர்
வேலூரில் தீபாவளிக்கு பலகாரம் செய்தபோது சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடிசை வீடு ஒன்று எரிந்து நாசமானது.
வேலூர்:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் முத்துமண்டபம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். அதற்குள் அவர்கள் துணிப்பையை தண்ணீரில் நனைத்து சிலிண்டர் மீது போட்டு தீயை அணைத்தனர். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த குடும்பத்தினரிடம் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தினர்.
இதேபோன்று வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரத்தில் உள்ள குடிசை வீட்டில் நேற்று முன்தினம் பலகாரம் செய்தனர். அப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த கட்டில், பணம், துணிமணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளியையொட்டி 2 நாட்களில் வேலூர், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.16 கோடியே 7 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என்று 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது, பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டன. கடந்த 13-ந் தேதி மாலை மற்றும் நேற்று முன்தினம் மதியம் முதல் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். அதனால் வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் மதுபானங்கள் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்தது.
வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 13-ந் தேதி ரூ.4 கோடியே 55 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் ரூ.5 கோடியே 12 லட்சத்துக்கும் என்று 2 நாட்களில் ரூ.9 கோடியே 67 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. இதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் தலா ரூ.3 கோடியே 20 லட்சம் என்று 2 நாட்களில் ரூ.6 கோடியே 40 லட்சத்துக்கு மது, பீர் வகைகள் விற்பனையானது.
வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.16 கோடியே 7 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டு தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.13 கோடியே 10 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. அதனை விட இந்தாண்டு ரூ.3 கோடிக்கு அதிகமாக விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து 9 பவுன், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 43). கண்ணமங்கலத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் 2 பேர் வீட்டில் படுத்து தூங்கினர்.
இரவு நேரத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்து விட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துள்ளனர். இதனால் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பைகள் மற்றும் நகை பெட்டிகளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.
அங்கு வைத்து பைகளில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம், பிளாஸ்டிக் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று விட்டனர்.
நேற்று காலை கண்விழித்த திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் மொட்டை மாடியில் நகைகள், பணம் இருந்த பைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று 15 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து அவரின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளிடம் விசாரித்தபோது நடந்ததை மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.
வேலூரில் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து 9 பவுன், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 43). கண்ணமங்கலத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் 2 பேர் வீட்டில் படுத்து தூங்கினர்.
இரவு நேரத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்து விட்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்துள்ளனர். இதனால் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பைகள் மற்றும் நகை பெட்டிகளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.
அங்கு வைத்து பைகளில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம், பிளாஸ்டிக் உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று விட்டனர்.
நேற்று காலை கண்விழித்த திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் மொட்டை மாடியில் நகைகள், பணம் இருந்த பைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை நகர பகுதியில் பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஆரணி, செய்யாறு, செங்கம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. திருவண்ணாமலை நகர பகுதியில் சாரல் மழை பெய்தது. பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
சாத்தனூர் அணையில் நீர்மட்டம் 86 அடி தண்ணீர் உள்ளது. குப்பநத்தம் அணையில் 45.7 அடியும், மிருகண்டா அணையில் 6.56 அடியும், செண்பகதோப்பு அணையில் 37.39 அடியும் தண்ணீர் உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடக்கிறது.
குடியாத்தம் மேல் ஆலத்தூர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வேலூர் ரவுடியை போலீசார் பெங்களூரில் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜானிபால்ராஜ் (33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜானி தலைமறைவானார். அதன் பிறகு அவரை பிடிக்க முடியவில்லை.
ஆனால், சர்வதேச இணைய அழைப்புகள் மூலம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரை பிடிக்க முடியாமல் பல நேரங்களில் தனிப்படையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில், ரவுடி ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலககத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் கடந்த மாதம் தனியாக ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் வேலூர் எஸ்.பி. செல்வகுமார் மற்றும் ஜானியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் புதிய யுக்திகள், புதிய குழுக்களுடன், புதிய கோணத்தில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஜானியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர்.
இதனிடையே ரவுடி ஜானி தனது மனைவியிடம் செல்போன் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசினார். அதில் அவர் தன்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டவாறே ஓடியது பதிவாகி உள்ளது. அந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல ரவுடியான ஜானி கைது செய்யப்பட்டது வேலூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நகரில் கைதான ஜானி இன்று அதிகாலை வேலூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரது கூட்டாளிகள் ஜானிக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 5 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரிகளான சுதாகர் (வயது 35), சரண்ராஜ் (28), மகி (35) ஆகிய 3 பேர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்றதால் மேற்கண்ட 3 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான சுதாகர், சரண்ராஜ், மகி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்ததன்பேரில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மேற்கண்ட 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள 3 சாராய வியாபாரிகளிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
அதேபோல் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 41), ராமாலை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (30). இருவரும் அப்பகுதியில் சாராயம் விற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சாராயம் விற்ற வழக்குகள் உள்ளதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பரிந்துரை செய்ததன்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சாராய வியாபாரிகளான குபேந்திரன் மற்றும் புருஷோத்தமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய உறவினர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் நிவாஸ். இவர், வேலூர் மக்கானில் இரும்புக்கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் முகம்மது பாஷா என்கிற நிவாஸ் (வயது 30). இவர், சம்பவத்தன்று கடையில் இருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர் தான் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் எனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதைக் கண்டு கொள்ளாத முகம்மதுபாஷா இணைப்பை துண்டித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிற்பகலில் அவருக்கு மீண்டும் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய அந்த நபர், தான் கேட்டபடி ரூ.1 கோடி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகம்மது பாஷா வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செல்போனில் மிரட்டியது சத்துவாச்சாரியைச் சேர்ந்த அவரது உறவினரான தமீம் (50) என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது தமீம், தான் விளையாட்டுக்காக போன் செய்து மிரட்டியதாகக் கூறினார். எனினும் விசாரணையில், முகம்மது பாஷாவுக்கும், தமீமுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தமீமை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அருகே போர்வெல் அமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஒன்றியம் டி.பி.பாளையம் ஊராட்சியில் அரிகவாரிபல்லி, தாசராபல்லி, கணகர்பட்டி, டிபி.பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அப்பகுதியில் போர்வெல் அமைத்து, 4 கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் டி.பி.பாளையம் கிராமப் பகுதியில் போர்வெல் அமைத்து, அங்கிருந்து பைப் லைன் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஆரம்ப கட்டப்பணிகளாக அரிகவாரிபல்லி கிராமத்தில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், போர்வெல் அமைக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து அரிகவாரிபல்லி கிராம மக்கள் எங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து, உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 150-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் குடியாத்தத்தை அடுத்த சித்தூர் சாலையில் சாமிரெட்டிப்பல்லி கிராம பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ஹேமலதா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போர்வெல் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியலால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன. பின்னர் போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர்.
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ''எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் பலரது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
வேலூர்:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியதை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே சென்றது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரஜினிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள வேலூர், காட்பாடி, வாணியம்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம் உள்ளிட்ட 13 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக “உங்களுக்காக கடவுள் கிட்ட நாங்க வேண்டிக்கிறோம். எங்களுக்கு நல்லாட்சித்தர நீங்க வாங்க ரஜினி’’ என்று உருக்கமாக போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.
தற்போது வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ‘‘எங்கள் குடும்ப ஓட்டு ரஜினிக்கே’’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் பலரது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அந்தந்த வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று ஒட்டியதாக கூறப்படுகிறது.
ரஜினியை அரசியலுக்கு வரவேற்று வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் வண்ணார்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). பூக்கட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வல்லண்டராமம் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.