என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை

    வேலூர், திருவண்ணாமலை நகர பகுதியில் பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஆரணி, செய்யாறு, செங்கம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. திருவண்ணாமலை நகர பகுதியில் சாரல் மழை பெய்தது. பரவலாக மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

    சாத்தனூர் அணையில் நீர்மட்டம் 86 அடி தண்ணீர் உள்ளது. குப்பநத்தம் அணையில் 45.7 அடியும், மிருகண்டா அணையில் 6.56 அடியும், செண்பகதோப்பு அணையில் 37.39 அடியும் தண்ணீர் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடக்கிறது.

    குடியாத்தம் மேல் ஆலத்தூர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியுள்ளது.

    Next Story
    ×