என் மலர்
திருப்பூர்
- அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.40, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.55,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.
- காரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
காங்கயம், பங்களாபுதூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 73) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக காங்கயம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர், புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள பொன்பரப்பி என்ற இடத்தில் பி. ஏ. பி., கிளை வாய்க்காலில் மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
- அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் சிஐடியூ., பனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ., பனியன் சங்க பொதுச் செயலாளா் ஜி.சம்பத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில், திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
அதில், தற்போது கடுமையாக உயா்ந்து இருக்கும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபா் 17-ந்தேதி முதல் 26 -ந்தேதி வரை திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், எல்.பி.எப். பனியன் சங்கத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. செயலாளா் அ.சிவசாமி, எம்.எல்.எஃப். பனியன் சங்க செயலாளா் மனோகரன், எச்.எம்.எஸ். செயலாளா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பள்ளபாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, 60பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு உரியது. விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும் எண்ணெய் ஆலை மட்டுமில்லாமல் தொழிற்சாலை நடத்தக்கூடிய அளவில் வளர வேண்டும் என எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
விவசாயத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த சங்கம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.அரசு நடத்தக்கூடிய சங்கத்தின் மூலமாக பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கடலை பருப்புகளை கொள்முதல் செய்து அரைத்து சுத்தமான எண்ணெய் எடுத்துவெளிபகுதி மக்களை கவரக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தின் கீழ் 394 நபர்களுக்கு ரூ.190.56 லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 8 குழுக்களுக்கு 80 நபர்களுக்கு ரூ.4.68 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் கடனுதவியையும், 29 நபர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவிகளையும், 6நபர்களுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமானது பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் டாக்டர்.காவ்யாஸ்ரீ மற்றும் மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபா்கள் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
- மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைது செய்யும் பணியில் தனிப் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனா்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயம், அவிநாசியில் தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபா்கள் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதனை நம்பி ஏராளமானவா்கள் செலுத்திய பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானது தொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் மாவட்ட குற்றப் பிரிவில் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் நிா்மல்குமாா், பொது மேலாளா் தேவிகா, கோபி ஆகியோா் மீது அக்டோபா் 11-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் உத்தரவின்பேரில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த நிறுவனத்தின் காங்கயம் கிளையில் மகளிா் குழு ஒன்றுக்கு தலா 10 போ் வீதம் 55 குழுக்கள் மூலம் 550 பெண்கள் தலா ரூ.1,341 என மொத்தம் ரூ.7, 37, 550ஐ செலுத்தியுள்ளனா்.
அதேபோல, தனிநபா் கடனுக்காக 261 போ் தலா ரூ.1,000 வீதம் ரூ.2.61 லட்சம் செலுத்தியுள்ளனா். இதில், 86 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களைக் கூறி காப்பீட்டுக் கட்டணம், ஆவணங்களை சமா்ப்பிப்பதற்கான செலவு என மொத்தம் ரூ.10 லட்சம் வரையில் வசூலித்துள்ளதும் தெரியவந்தது.
அதேபோல, அவிநாசி கிளையில் 52 குழுக்கள் மூலம் 520 பெண்களிடம் தலா ரூ.1,341 வீதம் ரூ.6,97,320, தனிநபா் கடனுக்காக 355 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் ரூ.3, 55,000 வசூலித்துள்ளனா். மேலும், 140 போ் தனிநபா் கடனுக்குத் தோ்வாகியுள்ளதாகக்கூறி ரூ.13 லட்சத்தை வசூலித்துள்ளனா்.இந்த நிறுவனம் சாா்பில் மொத்தம் ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தைச் சோ்ந்த ஆா்.கோபி (எ) வினோத் (40), திருச்சி மாவட்டம், கே.கே.நகா் எல்.ஐ.சி.காலனியைச் சோ்ந்த தேவிகா (43), திருச்சி பீமன் நகரைச் சோ்ந்த ஜெ.ஜான்கென்னடி (எ) ஆன்டனி (34) ஆகிய 3 பேரை தனிப் படையினா் கைது செய்தனா்.இதில், கோபியும், தேவிகாவும் அக்கா, தம்பி என்பது தெரியவந்தது. மூவரிடமிருந்த ரூ.11 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.
கோபி என்பவா் மீது வேதகிரி, வினோத், கோபால் என்ற பல்வேறு பெயா்களில் கள்ளக்குறிச்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் 6 மோசடி வழக்குகளும், தேவிகா (எ) பிரீத்தி மீது திருவள்ளூா், தஞ்சாவூா் ஆகிய இடங்களில் 2 மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைது செய்யும் பணியில் தனிப் படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனா்.
- அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
- அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அவிநாசி,அக்.15-
அஞ்சலக வார விழாவையொட்டி, அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
அவிநாசி அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவிநாசி அஞ்சல் அலுவலா் ஏஞ்சலின் ஐஸ்வா்யா வரவேற்றாா்.
அஞ்சல் வணிக வளா்ச்சித் திட்டம், விரைவு அஞ்சல் சேவை, பாா்சல் சேவை, இணையவழி, வெளிநாட்டு அஞ்சல், அஞ்சலக வங்கிக் கணக்கு சேவை, வங்கி வட்டி விகிதம், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம், பென்ஷன் திட்டம், ஆதாா் சேவைகள் உள்ளிட்டவை குறித்து திருப்பூா் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் விளக்கமளித்தாா்.
இதில், தெக்கலூா், சேவூா், பழங்கரை, துலுக்கமுத்தூா், செம்பியநல்லூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
- 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருப்பூர்:
தேசிய மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 3,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா், மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், கூடுதல் சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, நீதித் துறை நடுவா்கள் முருகேசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.
- 19-ந் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
அவிநாசி:
பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை தொடங்கினார்.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். 2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி தொடங்க இருந்தார். ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை மீண்டும் நாளை 16-ந்தேதி (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
மேலும் 3-ம் கட்ட நடைபயணத்தில் மேட்டுப்பாளையம், பவானி, அந்தியூர், கோபி, , சூலூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சங்ககிரி, குமாரபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி லால்குடியில் 3-ம் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
அவினாசியில் நாளை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளை ஆய்வு செய்தார்.
- மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்
காங்கயம்:
காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் ஆய்வு செய்தாா்.
இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளையும், மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சதீஷ்குமாா், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோம் தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டன்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூரியா நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.
- நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
- குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.
உடுமலை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அது சமயம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரெயில்நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம்மநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






