சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 652 வழக்குகளுக்கு தீா்வு

நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

தேசிய மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 3,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா், மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், கூடுதல் சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, நீதித் துறை நடுவா்கள் முருகேசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com