என் மலர்
திருப்பூர்
- கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது.
- அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த சூழலில் கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியவாறு அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்து திருமூர்த்தி அணையை அடைந்தது. இந்தநிலையில் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.
ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
திருப்பூர்:
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் வித்தியாசமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சப் - கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சப் - கலெக்டர் பேசுகையில், கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிட வேண்டும். நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்,
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை பார்க்கிறான். மாணவ மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக வாழ்நாளில் மரங்களை நடவுசெய்து வளர்க்க வேண்டும் . கலாமின் பொன்மொழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பேசினார். மாணவ செயலர்கள் ராஜபிரபு, காமராஜ், மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலாமின் படங்கள் கொண்ட முகமூடியை அணிந்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
திருப்பூர்:
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் 37வது வார்டில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவிக்னேஷ் ஏற்பாட்டில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அவர்களின் உடல்நலம் பேணும் வண்ணம் அவர்கள் தங்கி பயிலும் விடுதியின் அருகே கால்பந்து மைதானம், இறகுபந்து அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளடங்கிய விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டென் எக்ஸ் விளையாட்டு பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஸ்வேதா, ராயபுரம் பகுதியை சேர்ந்த பூர்ணபிரசாத், அஜய், பிரவீன், தினேஷ் மற்றும் மாணவர் அணி செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
- முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.ஏ.வி.பி. சிபிஎஸ்சி., பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கனவுமெய்ப்படும் என்னும் தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தியும், சிரிப்போடு கூடிய சிந்தனையை தூண்டியும் சிறப்புரை ஆற்றினார்.
வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளில் ஏ.வி.பி.கல்விக் குழுமங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 10000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டும் சுமார் 10,200 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் சார்பில் 100000-க்கும் அதிகமான மரங்களை வழங்கி பசுமைத்தாயகத்திற்கு அடிகோலிய ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதியின் சமூகப்பணியினை பாராட்டியும் ஏவுகணைநாயகனின் கனவினை நனவாக்குவதற்காகவும் ஏ.வி.பி.நாயகன் என்னும் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாணவி அதுல்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
- இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.
- மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குள்ளாயூர் கிராமத்தில் அருளாளப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருளாளப்பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணிக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.
ஒவ்வொரு அணைப்பகுதியிலும் ஒரு கோவில் என்ற சோழர்கால கோட்பாட்டின்படி காளியாத்தாள் கோவில் அணையை மையப்படுத்தி நொய்யல் ஆற்றின் தென்புறம் சிவன்கோவிலும், வடபுரம் பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சோழ மன்னர்கள் தானம் வழங்கிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புரட்டாசி அமாவாசை தினத்தன்று பந்தசேவை பகல் 12 மணிக்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு தொடர்ச்சியாக 10 சனிக்கிழமைகளில் வந்து மனதார வேண்டுபவர்களுக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நீண்டநாள் நம்பிக்கையாக இருக்கிறது.
- தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக., 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் கொடியேற்று விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது
- மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்லடம் நகராட்சி மற்றும் பல்லடம் வட்டார பகுதிகளில் உணவு வியாபாரம் செய்யக்கூடிய மளிகை கடை உரிமையாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள், ஓட்டல் ,பேக்கரி, மெஸ், மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்று வழங்கும் முகாம் சிறப்பு நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மளிகை கடை, ஓட்டல், தள்ளுவண்டி உணவுக் கடை, போன்றவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
- போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
- மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் போதிய மழை இல்லாததால் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மழை வேண்டி வருண பகவானை கும்பிட்டு மழை சோறு எடுக்க முடிவு செய்தனர். இதன்படிகிராம மக்கள் வீடு, வீடாக சோறு யாசகம் பெற்று, ஊர் கோவில் முன்பு வைத்து பெண்கள் பொங்கல் வைத்துஅம்மனுக்கு படையலிட்டனர்.
பின்னர் அம்மனுக்கு படையலிடப்பட்ட பழைய சோறை ஊர்மக்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பழைய பொருட்கள்,பழைய அம்மிக்கல்,உரல் ஆகியவற்றை கோவில் முன்பு வைத்து மழை வேண்டி ஒப்பாரி பாட்டு பாடி, கும்மியடித்து அனைத்து பழைய பொருட்களையும் ஊர் எல்லையில் கொண்டு சென்று வீசினர்.
கிராம மக்களின் இந்த நூதன வழிபாட்டை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் அதிசயமாக பார்த்து ரசித்தனர்.
- கழிவு நீர் கால்வாயின் மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்து கார் கால்வாய்க்குள் சிக்கியது.
- இதே போல கடந்த வாரத்திலும் ஒரு கார் கால்வாய்க்குள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சள், சந்தனம்,மலர், பன்னீர், பால், தயிர், கனி ஆகிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் மகாளய அமாவாசை யை முன்னிட்டு வீரக்குமாரசாமி கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் தேன், பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள், சந்தனம்,மலர், பன்னீர், பால், தயிர், கனி ஆகிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது
பல்லடம்:
பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம்,மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில், இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் பல்லடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 100க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. இந்த முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் மணிகண்டன், குற்றப்பிரிவு சரஸ்வதி, மங்கலம் கோபாலகிருஷ்ணன், அவிநாசிபாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் சமூக ஆர்வலர்கள் கொடுத்த மனுவில் , பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்பதாகவும், எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
- நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களது நிலங்கள் மூலம் மின் இணைப்பு பெற்று பயன் பெற்று வந்தனர்.
- ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெத்தம்பட்டி அருகே விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிஏபி., பாசன வாய்க்கால் அமைக்க நிலம் கொடுத்துள்ளனர்.
நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களது நிலங்கள் மூலம் மின் இணைப்பு பெற்று பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் பாசன வாய்க்கால் அருகே மின் இணைப்பு வழங்கக் கூடாது என தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் சட்டம் உள்ளதாகவும் இது சம்பந்தமாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கின் உத்தரவின் பேரில் விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் வருவாய் துறையினர் மற்றும் மின்சார வாரியத்தினர் அப்பகுதியில் சுமார் 12க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்து விட்டதாக கூறி அப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து மின் இணைப்பை துண்டிக்க வந்திருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவின் நகலை காண்பித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆடு மாடு கோழிகள் உடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற போவதாக அறிவித்த நிலையில் தாராபுரம் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத்தினர் நாளை திங்கட்கிழமை அன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அதன் பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், நாளை பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாதவிட்டால் ஆடு, மாடுகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.






