search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு  புத்தகங்கள்-விளையாட்டு உபகரணங்கள்
    X

    விழாவில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள்-விளையாட்டு உபகரணங்கள்

    • விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் 37வது வார்டில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் விடுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவிக்னேஷ் ஏற்பாட்டில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் அவர்களின் உடல்நலம் பேணும் வண்ணம் அவர்கள் தங்கி பயிலும் விடுதியின் அருகே கால்பந்து மைதானம், இறகுபந்து அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளடங்கிய விளையாட்டு பயிற்சி கூடத்தில் மாணவிகளுக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டென் எக்ஸ் விளையாட்டு பயிற்சி கூடத்தின் உரிமையாளர் ஸ்வேதா, ராயபுரம் பகுதியை சேர்ந்த பூர்ணபிரசாத், அஜய், பிரவீன், தினேஷ் மற்றும் மாணவர் அணி செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×