என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மாணவர்கள் கண்டிப்பாக மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும்: சப்-கலெக்டர் வேண்டுகோள்
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
திருப்பூர்:
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் வித்தியாசமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சப் - கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சப் - கலெக்டர் பேசுகையில், கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிட வேண்டும். நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்,
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை பார்க்கிறான். மாணவ மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக வாழ்நாளில் மரங்களை நடவுசெய்து வளர்க்க வேண்டும் . கலாமின் பொன்மொழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பேசினார். மாணவ செயலர்கள் ராஜபிரபு, காமராஜ், மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலாமின் படங்கள் கொண்ட முகமூடியை அணிந்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.