என் மலர்
திருவாரூர்
- மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
- அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை அடங்கிய சி.ஐ.டி.யூ. சார்பில் 15 நிமிடம் அனைத்து வாகங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச்செயலாளர் நபி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், அப்துல் ஹமீது, சுல்தான், நவாஸ்கான், புரோஸ்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
- உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை செயற்குழு க்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் வட்டாரச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், பொதுக்குழு உறுப்பினர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார்.
தீர்மானங்களை வட்டார செயலாளர் செல்வசிதம்பரம் வாசித்தார். கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
- சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும்.
நீடாமங்கலம்:
தேசிய அறிவியல் தினத்தை யொட்டி, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து "நிலா திருவிழா " என்ற நிகழ்வு வலங்கைமான் விருப்பாட்சிபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது.
இதில் வானவியல் அறிஞர் பரமேஸ்வரன் பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களை யும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரங்களையும் காட்டினார்.
மேலும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வலங்கை மான் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் கூறியதாவது:-
மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றார்.
நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுஅப்துல் கபூர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் நேற்று திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதனை ஓட்டி வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 110 லிட்டர் அளவில் சாராயம் மற்றும் 750 மி.லி அளவு கொண்ட 72 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ரூ 1 லட்சம் மதிப்பிலான அந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் வடக்கு தெருவை சேர்ந்த கரன் (25) மற்றும் அதே தெருவை சேர்ந்த முருகேஷ் (21) இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நேருதாசன் (வயது 62) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது.
இதேபோல் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியில் சுந்தரமூர்த்தி (54) என்பவர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை.
- 1 கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருவாரூர்:
திருவாரூர் பகுதியில் சில தினங்களாக பனிப்பொழிவு குறைந்து பகலில் வெயில் வெயில் அதிகரித்துள்ளது.
இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக முலாம்பழம் என்னும் கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
திருவாரூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்திலும் கொட்டி விற்பனை செய்யப்படுகிறது.
கிர்ணி பழம் ஆந்திராவில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருவாரூர் நகருக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் வருகிறது.
வியாபாரிகளுக்கு 1கிலோ ரூ 25 க்கு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
- பள்ளி வளாகத்தில் 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.
- அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகைக்காக தேர்வு நேற்று நடைப்பெற்றது.
இதில் முத்துப்பேட்டை வட்டாரத்தில்உள்ள த.கீழக்காடு, கல்லடிக்கொல்லை, பெருக வாழ்ந்தான், காடுவெட்டி, ஆரியலூர், மககலூர், பெத்தவேளாண்கோட்டகம், புதுத்தெரு, ஆசாத்நகர்உட்பட 35அரசு பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 357பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வு பள்ளி வளாகத்தில் உள்ள 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளராக பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி செயல் பட்டார்.
துறை அலுவலராக முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மேற்பா ர்வையில் ஈடுபட்டனர்.
முன்னதாக பள்ளி வளாகத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.
மேலும் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.
- கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார்.
நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், எழிலரசன்நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாராட்டு சான்று வழங்கி பேசும்போது,
திருத்துறைப்பூண்டியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் செயல்படுத்த ப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் நகராட்சியின் 24 வார்டுகளிலும், தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்த அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணி செய்யப்படுகிறது.
அப்போது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் அவசியம், வீடுகளிலேயே குப்பைகளை மக்கவைக்கும் அமைப்பை ஏற்படுத்துதல், கழிவுநீரை மேலாண்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தூய்மையை கடைப்பிடிக்கும் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு பாராட்டு சான்று வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
இதன்மூலம் தூய்மையான நகரை கொண்டுவர முடியும் என்றார்.
சிறப்பாக செயல்படும் மங்கை மகால் திருமண மண்டபத்திற்கும், தூய்மை குறித்த விழிப்புணர்வு பணி செய்யும் பாலம் சேவை நிறுவனத்திற்கும் , சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்க ளுக்கு நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைமா தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் அம்பிகா நன்றி கூறினார்.
- ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் ஆய்வு.
- ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், குடவாசல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வில், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உடனிருந்தார்.
நீடாமங்கலம் ஒன்றியத்தி ற்குட்பட்ட, ஒளிமதி, ஒடந்துறை பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பயனா ளியிடம் வழங்கப்படும் மருந்துவ சிகிச்சைகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.18.89 லட்சம் மதிப்பீட்டில் ராயல் சிட்டியின் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருவதையும், பாப்பையன் தோப்பு, பாலகிருஷ்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளவர் பிளாக் சாலையினையும், நீடாமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியினையும் பார்வை யிட்டு, மாணவ ர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், குடவாசல் பேரூராட்சியில் அகரஒகை காளியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதார் சாலையினையும், கொரடாச்சேரி ஒன்றியம், வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க ப்பட்டுவரும் பாடமுறைகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரை யாடினார்.
இவ்ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பயனாளிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது.
- பூக்கட்டுதல், வீட்டு வேலை செய்தலில் அதிக வருமானம் இல்லை.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் செயல்படுத்தப்படும் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டம் குறித்து நகராட்சி ஆணையர் பிரதான் பாபு எடுத்து கூறினார்.
மேலும், திட்டங்கள் குறித்த கருத்து கேட்பை மாநில திட்டக்குழு கொள்கை ஆலோசகர் ஆண்ட்ரு சேசுராஜ் ஒருங்கிணைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். பயனாளிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இதில் விவசாய வேலை, பூக்கட்டுதல், வீட்டு வேலை செய்தலில் அதிக வருமானம் இல்லை. எனவே, இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதில் தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனரக உதவி திட்ட அலுவலர் சாமிநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாதாமாதம் மின்சாரத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.
- மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரெயில் கட்டண சலுகை திரும்ப வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 11-வது அமைப்பு தின விழா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார்.
வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்லத்துரை விளக்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியின் அடிப்டையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதம் என்பதை தவிர்த்து மாதாமாதம் மின்சாரத்தை கணக்கீட்டு வசூல் செய்ய வேண்டும்,
இறந்துபோன ஓய்வூதியருக்கு ரூபாய் 1,50,000 குடும்பநல நதி வழங்க வேண்டும்,மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில் கட்டண சலுகை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜமோகன், ஜெகஜோதி, நடராஜன், அன்பழகன், கருணாநிதி உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் அண்ணா துரை நன்றி கூறினார்.
- 2-ம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
- அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான வீரமணவாளன் கோயில் உள்ளது. கிராம மக்களால் கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று யாகசாலை பூஜைகள் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணா ஹுதி நடைபெற்றது.
பின்னர் கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை வலம்வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
வீரமணவாள சுவாமி, காத்தாயி அம்மன், பச்சையம்மன், சப்த்தகண்ணிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மன்னார்குடி, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






