என் மலர்
திருவாரூர்
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- உரிய பாதுகாப்புடன் இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர்:
வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.
தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் ஜவுளிக்க டைகள், உணவகங்கள், ரைஸ்மில்கள்உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட தொழில்கள் என பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களது பாது காப்பினை உறுதி செய்யு மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா, மிரட்டல்கள் இருந்து வருகிறதா, தாக்கப்படுகிறார்களா என கேட்டனர்.
அதன்படி திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம், வண்டம்பளையம் தனி யார்நவீன அரிசி ஆலை மற்றும்நீடாமங்கலம், மன்னார்குடி, பரவாக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தாங்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருந்து வருவதாகவட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2 நாட்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் கவியரசன்.
இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆவார்.
இவர் முன் பகை காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு திருக்கண்ணமங்கை அருகே வயல்வெளியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் என்கிற இடத்தில் காவல்துறையினர் இந்த கொலையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் காளிதாஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அதனை எதிர்த்து அதே இடத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சபரிநாதன் சின்ன காளி என்கிற காளிதாஸ், பெரிய தம்பி என்கிற ராஜசேகர், சந்தோஷ்குமார், வசந்தகுமார், சிவகாளிதாஸ், கணேசன், சந்தோஷ், சுர்ஜித் ஆகிய 9 நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதில் சின்ன காளி என்கிற காளிதாஸ் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
- நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும்.
- திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ. 600-ஆக உயர்த்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு இடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாளை (7-ந்தேதி) தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 10 மையங்களில் பேராட்டம் நடைபெற உள்ளது.
நீடாமங்கலத்தில் நடைபெறும் போராட்டத்தில் செல்வராசு எம்.பி.யும், திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் போராட்டத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றனர்.
மற்ற மையங்களில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடை பெற்றது.
- நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை, ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைப்போல் நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோவிலில் ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூவனூர் கல்யாணி அம்மன் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
- அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி சார்பில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
முகாமிற்கு நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்,
அனைவருக்கும் ரத்த அழுத்தம் ,சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது, தேவைபடுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற முதியோர்கள் 40 பேருக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது.கண்ணாடி தேவை படும் சுமார் 205 பேருக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் ஊராட்சி தலைவர்கள் சுஜாதா பாஸ்கரன் தமிழ்செல்வி வேல்முருகன்,திலகவதி சிவசுப்ரமனியன், தேவகி உதயகுமார், ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார், உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன், ஏரியா பொது மேலாளர் சரவணன்,முத்துகுமார், நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மகேந்திரன், துணைத்தலைவர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் நல்லூர், களப்பால், வாட்டார், வெங்கத்தான்குடி, அக்கரைகோட்டகம், பைங்காட்டூர், பனையூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முருகானந்தம் ஒருங்கிணைத்தனர். முகாமை கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது.
- விவசாயிகளுக்கு மானியத்தில் பண்ணை கருவிகள் வினியோகம் செய்யப்படுகிறது.
- இருப்பு சட்டி 1, கதிர் அறுக்கும் அரிவாள் 2 உள்ளிட்ட 5 வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.
திருவாரூர்:
நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 50 சதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளாா்.
இது குறித்து அவர் கூறியதாவது:- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடப்பாரை1, மண் வெட்டி 1, களை வெட்டி 1, இருப்பு சட்டி 1, கதிர் அறுக்கும் அரிவாள் 2 உள்ளிட்ட 5 வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.
இந்த பொருட்கள் 50 சதவீத மானியம் போக ரூ.1,500 -க்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது.
- பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலைக்கல்லூரியில் 52-வது தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் காவேரிபடுகை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மருத்துவர் இளவரசன் பேசுகையில்:-
விபத்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் மயக்கம், சுயநினைவை இழத்தல் போன்ற நேரங்களில் எப்படி முதலுதவி செய்வது, இதயம் செயலிழக்கும் நேரங்களில் மூச்சு கொண்டு வருதல், எலும்பு முறிவு, ரத்த கசிவு, கண் பாதிப்பு, தீக்காயங்கள், விஷவாயு தாக்குதல், மின் தாக்குதல், பாம்பு, விஷ பூச்சிகள் கடித்தல் இவற்றிலிருந்து எப்படி தப்பிப்பது, மற்றவர்களை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தார்.
தீயணைப்பு அலுவலர் காயத்ரி தீ விபத்தை எவ்வாறு தவிர்ப்பது குறித்து பேசினார். பின்னர், தீ பாதுகாப்பு குறித்த பல்வேறு உபகரணங்கள், நவீன முறைகள், குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவு துணை பொதுமேலாளர் தியாகராஜன், தீயணைப்பு துணை பொது மேலாளர் ரமேஷ் காகிரோ, பொறியாளர் கிரிஷ் மிஷ்ரா, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் பன்னீர்செல்வம், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.
- ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.
- கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவாரூர்:
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரபணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட அவர் கூறியதாவது:-
திருவாரூர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பார்வையாளர்கள், உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டட த்தினை பார்வையிட்டார்.
பின்னர், மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகா லினை பார்வையிட்டு, கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
- முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த வீரசேகரன் என்பவர், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரைக்காலை சேர்ந்த நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகியோர் போலி மதுபானம் தயாரித்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
இதை தொடா்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
அதன்பேரில் வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகிய 2 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
- நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.
தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.
எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.
- ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.
திருத்துறைப்பூண்டி:
தமிழக முதலமைச்சருக்கு திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்டவை.
பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950 களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த 60 ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது,
கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
இவை ஆழமாக வேர் விட்டு உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் தண்ணீர் செல்வதை தடைசெய்கிறது.
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன.
இதன் வெப்பத்தால் மழையின் அளவை வெகுவாக குறைத்துள்ளது. மற்ற மரங்கள் போல் ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லை.
எனவே கருவேல மரங்களை மாவட்டந்தோறும் அரசு துறைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை கொண்ட மக்கள் இயக்கம் மூலம் தொடர் அழிப்பு பணி செய்தால் மட்டுமே முற்றிலுமாக அழிக்க முடியும்.
எனவேஇதை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






