search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Nandi"

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடை பெற்றது.
    • நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம்,  திருமக்கோட்டை, ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப்போல் நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோவிலில் ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூவனூர் கல்யாணி அம்மன் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

    வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×