என் மலர்
நீங்கள் தேடியது "Shani Pradosha worship"
- வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்
- மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது .
இதையொட்டி சிவாச்சாரியார்கள் நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- பிரதோஷம் அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும்.
- பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது வழக்கம்.
* சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனிமகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
* பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

* சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
* அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர்வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும்.
* இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர், பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரயை பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளன.
* சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும்.
* அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

* சனி பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம்.
* அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப் பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
* பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
* மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வரவேண்டும்.






