என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனி பிரதோஷ வழிபாடு"

    • அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.
    • பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சனி மகா பிரதோஷம் ஆகும்.

    தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது ஏகாதசி தினம் ஆகும். மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், 3-ம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார்.

    பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவபெருமானின் 5 விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும்.

    பிரதோஷ வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். சனிபிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும். பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும்.

    சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்.

    எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    காரியத்தடை, சுபகாரியங்கள் தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (சனிக்கிழமை) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது.

    பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது.

    சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

    நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க உருகி வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

    பிரதோஷ காலத்தில் சிவாய நம எனும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    • சுவாமி, அம்பாள், நந்திக்கு 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமியை வழிபட்டனர்.

    செங்கோட்டை:

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 36 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் சுவாமி, அம்பாள், நந்தீஸ்வரக்கு தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகார உலா வந்தார்.

    மகா சனி பிரதோசமான நேற்று செங்கோட்டை சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.இதனை போன்று ஆறுமுகசாமி ஒடுக்கம், மாலையான் சாமி கோவில், புளியரை கோவில், இலத்தூர் மதுநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனி பிரதோச வழிபாடுகள் நடைபெற்றது.

    • வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது .

    இதையொட்டி சிவாச்சாரியார்கள் நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×