என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
- அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நேருதாசன் (வயது 62) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது.
இதேபோல் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியில் சுந்தரமூர்த்தி (54) என்பவர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






