search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில், திறன் படிப்பு உதவி தொகைக்கான தேர்வு
    X

    தேர்வு எழுதும் மாணவர்கள்.

    முத்துப்பேட்டையில், திறன் படிப்பு உதவி தொகைக்கான தேர்வு

    • பள்ளி வளாகத்தில் 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.
    • அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகைக்காக தேர்வு நேற்று நடைப்பெற்றது.

    இதில் முத்துப்பேட்டை வட்டாரத்தில்உள்ள த.கீழக்காடு, கல்லடிக்கொல்லை, பெருக வாழ்ந்தான், காடுவெட்டி, ஆரியலூர், மககலூர், பெத்தவேளாண்கோட்டகம், புதுத்தெரு, ஆசாத்நகர்உட்பட 35அரசு பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 357பேர் இந்த தேர்வை எழுதினர்.

    இந்த தேர்வு பள்ளி வளாகத்தில் உள்ள 20 பேர் வீதம் 18 அறைகளில் நடைபெற்றது.

    இந்த தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளராக பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி செயல் பட்டார்.

    துறை அலுவலராக முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மேற்பா ர்வையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக பள்ளி வளாகத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அந்தந்தப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

    மேலும் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×