என் மலர்
திருவாரூர்
- திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இ-சேவைமையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்ப டும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புதிட்டம், வட்டவழங்கல் அலுவலகம், தனி தாசில்தார், நகர நிலவரி திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
- பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரனிடம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராயல் காதர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வணிகர் அணி செயலாளர் ஜான் முகம்மது தலைமையில் கிளை செயலாளர் சதாம் உசேன், ம.ஜ.க. வளைகுடா பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது, தீன்முகம்மது, ஜியாவுதீன், ராசித் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ரமலான் நோன்பு மாதத்தில் குடிதண்ணீர், தெருவிளக்கு, சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க கோரி ம.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
புனிதமிகு ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
நமது ஊராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வழக்கம்போல் இவ்வருடமும் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்சும் பணிகளும், இரவு நேர வணக்க வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற உள்ளன.
அதேபோன்று வீடுகளிலும் ஒருமாத காலம் நோன்பு நாட்களை கொண்டாட உள்ளனர். எனவே ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தங்குதடையின்றி குடி தண்ணீர் கிடைக்க வேண்டும்.
வீடுகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரையும் உரிய நேரங்களில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும்.
பழுதான தெருவிளக்கு கம்பங்களில் புதிய மின்விளக்குகளை மாற்றியும் இருள் சூழ்ந்த பகுதிகளில் புதிய மின்விளக்குகளை பொறுத்தியும் வெளிச்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.
அனைத்து பள்ளிவாசல் வளாக பகுதிகளிலும் தெரு ஓரங்களிலும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பகுதியாக்கி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை களை கண்டித்தும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.கோமதி, மாவட்ட கன்வீனர் மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.என்.அனிபா, மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சாலை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ரகுபதி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பவானி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து எரிவாய்வு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா நடை பெற்றது.
- புனித நீர் நிரப்பப்பட்ட 1,008 சங்குகள் வைத்து யாகபூஜைகள் நடத்தப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த தலம், நவக்கிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட 1,008 சங்குகள் வைத்து யாகபூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் மூலவர் குரு தட்சிணாமூர்த்திக்கு 1,008 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது புத்தகம் என்பது கேடயம் போன்றது.
- மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிடும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.
ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பதாகையை வெளியிட்டு பேசும்போது,
வாசிப்பு பழக்கம் தற்போது குறைந்துவிட்டது. படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது.புத்தகம் என்பது கேடயம் போன்றது.
வாசிப்பினால் நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். புத்தகங்களை பற்றி அறிஞர்கள் கூறும்போது தங்களை அறிஞர்களாகவும், தலைவர்களாகவும், மாற்றியது புத்தகங்கள் தான் எனக் கூறுகின்றனர்.
எனவே மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம். தேவையான புத்தகங்களை வாங்கவேண்டும், பல்வேறு பேச்சாளர்களின் பயனுள்ள சொற்பொழிவை கேட்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்படி புத்தக திருவிழாவை வெற்றிபெறச் செய்யும் விதமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மக்கள் 5000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொள்ள விழிப்புணர்வு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
- துணை மேலாளர் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.
- மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலகு அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் நடத்தப்பட்டது.
திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலகு 1 அலுவலகத்தில் உள்ள துணை மேலாளர் அலுவலகம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்த தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது.
சேமிப்பு கிடங்கு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெட்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து மணி நேர சோதனையில் முடிவில் மொத்தமாக 1லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்த கோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
- தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
திருவாரூர்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுபயணத்தை முடித்து விட்டு நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தார். மன்னார்குடி அடுத்த வடுவூரில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.
பின்னர் வடுவூரில் இருந்து புறப்பட்டு திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இரவு திருவாரூர் சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கினார்.
இன்று காலை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கருணாநிதி, அவரது பெற்றோர் முத்துவேல்-அஞ்சுகம், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலைஞர் இல்ல நினைவகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பு எழுதினார்.
தொடர்ந்து அவருக்கு, தி.மு.க. தொண்டர்கள் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்ட உபகரணங்களை பரிசாக வழங்கினர்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
விடியலை நோக்கி பிரசாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன். செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.5 கோடியில் 316 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். திருக்குவளையில் இருந்து திருவாரூர் வரும் வழியில் ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு அளித்ததால் இங்கு வர தாமதம் ஏற்பட்டது.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். குடும்பத்திற்கு ஒருவருக்காவது அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து முதல்-அமைச்சர் பணியாற்றுகிறார். அவரோடு, அவர் காட்டுகின்ற வழியில் நாங்களும் பணியாற்றி வருகிறோம்.
மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த அரசுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் கலைவாணன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.
திருவாரூர்:
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கூறியதாவது,
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்திலிருந்து அங்குள்ள பேருந்தில் எளிமையான முறையில் பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை, ஒருவர் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார்.
கோஷம் போடுகிறார்.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.
நெல் மூட்டைகள் மட்டுமல்ல அரசின் அனைத்து திட்டமும் தேங்கி கிடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜாமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
- இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-
மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
- உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.
இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
- தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழாவை முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.
திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது வருகிற 1-ந் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேரோட்டத்தினை யொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் தேர் கட்டுமானப் பணிகளுக்காக ஐந்து தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல், தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் குறித்தும், வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல், போக்குவரத்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்பட்டது.
திருக்கோயிலுக்குள் கூடுதலாக சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும், தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைத்து தருதல் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து தருதல் குறித்தும் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான பணிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாருஸ்ரீ, தேரோட்டம் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.
- கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
- பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்உள்ள காமராஜர் பஸ்நிலையம் பழுதடைந்து காணப்பட்ட தால் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதற்கான கட்டுமான பணிகள் முதற்கட்டமாக ரூ. 26 கோடியே 76 லட்சம் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதேபோல், மன்னார்குடியில் பாதாள சாக்கடை பணிகளும், பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
விழாவில் நகர்மன்ற தலைவர் மண்ணை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.






