search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1008 Sangabhishekam"

    • திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.
    • சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.

    தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பூஜித்து வணங்குகின்ற மாதம் கார்த்திகை மாதம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.

    திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திர பகவான் "மனோகாரகர்' ஆவார். மனதில் எழும் எண்ணங்களுக்கு இவரே காரண கர்த்தாவாக இருக்கிறார்.

    சந்திரனைப் பிறையென சூடிக் கொண்டிருக்கும் ஈசனுக்கு பல சிவாலயங்களில், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

    சந்திரனுக்கு "சோமன்' என்ற பெயரும் உண்டு. அதனால் தான் சிவனுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திர சேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்துள்ளன.

    எட்டுவகை சங்குகள்:

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது வெளிவந்த பதினாறு வகையான தெய்வீகப் பொருள்களில் வலம்புரி சங்கும் ஒன்று என்கிறது புராணம். இந்த சங்கே தெய்வ ஆராதனைகளில் ஒலி எழுப்பப் பயன்படுத்தப்படுகிறது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும்,10 ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைகானஸ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான சங்குகளில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். இதனை இடம்புரி சங்கு என்று கூறுவர். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக இருக்கும். அத்தகைய சங்குகளை வலம்புரி சங்கு என்பார்கள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி சங்கே பெருமை பெற்றது. அந்த சங்கினால் பூஜைகள் செய்வது அளவற்ற பலன்களைத் தரவல்லது.

    மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ளது வலம்புரி சங்கு. பஞ்ச பாண்டவர்களில் தருமர் "அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ச்சுனன் "தேவதத்தம்' எனும் தேவசங்கையும், பீமன் "மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் "சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும், சகாதேவன் "மணி புஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சங்கு, நுண் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது. வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. மேலும் தீய சக்திகளைத் தடுக்கும் குணம் உள்ளது. இதனால் தான் இன்றும் சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கும் சங்கைப் பயன்படுத்தி வந்தனர்.

    சங்கினை காதில் வைத்துக் கொண்டால் ஓம்கார ஒலியைக் கேட்கலாம். ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்த தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரண பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில்தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

    சங்காபிஷேகம் செய்வதில் பல நியமங்கள் இருக்கின்றன. 54, 60, 108 சங்குகள், 1,008 சங்குகள் என்ற எண்ணிக்கைகளில் அபிஷேகம் செய்வார்கள். சங்குகளில் புனித நீரால் அபிஷேகம் செய்ய, சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.

    • திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

    திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பை சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

    சிவனுக்கு சங்காபிஷேகம் சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம்.

    சிவனுக்கு விரதம் சோமவார விரதம் எப்படிப்பட்டது என்பதை சிவனே சொல்கிறார். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    சந்திரனுக்கு பெருமை சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள்.

    சிவனுக்காக விரதம் அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.

    • பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. சங்காபி ஷேகத்தை முன்னிட்டு வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளுக்கு புனித நீரூற்றி அதில் பல்வேறு வகையான பூக்கள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.

    தொடர்ந்து பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா நடை பெற்றது.
    • புனித நீர் நிரப்பப்பட்ட 1,008 சங்குகள் வைத்து யாகபூஜைகள் நடத்தப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த தலம், நவக்கிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது.

    சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட 1,008 சங்குகள் வைத்து யாகபூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் மூலவர் குரு தட்சிணாமூர்த்திக்கு 1,008 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது
    • கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர் :

    நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஹோமம் தொடங்கியது.

    தொடர்ந்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

    மதியம் பூர்ணாகுதியும் அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல்அலுவலர் மணவழகன், கோவில்கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    • விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. இதில் 1008 சங்குகளால் சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு சிவன், விநாயகர், முருகன், நந்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ×