search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், ஆழித்தேர் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாரூரில், ஆழித்தேர் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

    • சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழாவை முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.

    திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது வருகிற 1-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேரோட்டத்தினை யொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் தேர் கட்டுமானப் பணிகளுக்காக ஐந்து தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல், தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல் குறித்தும், வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருதல், போக்குவரத்து சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் வழங்கப்பட்டது.

    திருக்கோயிலுக்குள் கூடுதலாக சுகாதார ஏற்பாடுகள் செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்வது குறித்தும், தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைத்து தருதல் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு போக்குவரத்து கழகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து தருதல் குறித்தும் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான பணிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாருஸ்ரீ, தேரோட்டம் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×