என் மலர்
திருநெல்வேலி
- வள்ளியூர் பஸ் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
- சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர்:
வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வள்ளியூர் பஸ் நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம், செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- மூத்த மகள் இறந்ததால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார்.
- நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 43). இவரது மனைவி வள்ளி செல்வம் (39). இவர்களது மூத்த மகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வள்ளி செல்வத்திற்கும், நம்பிராஜ னுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நம்பிராஜன் வெளியே சென்று விட்டார். அதன்பின் நம்பிராஜன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வள்ளி செல்வத்தையும், அவரது 10 வயது மகளையும் காண வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான வள்ளி செல்வம் மற்றும் அவ ரது மகளை தேடி வருகிறார்.
- சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் என்ற கோழி அருள். இவருக்கு சொந்த ஊர் சுரண்டையை அடுத்த பங்களா சுரண்டை ஆகும்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவிட்டல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், சில வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடித்து வந்து ஆஜர்படுத்துமாறு நெல்லை மாவட்டம் அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.
அவர் ஓசூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு முகாமிட்டு தனியார் விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று இரவில் ஒரு விடுதியில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை கோழி அருளை பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு ஜீப்பில் அழைத்து வந்தனர்.
- தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகள், மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 85.50 அடியாக இருந்த நிலையில் இன்று 1 அடி உயர்ந்து 86.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 99.31 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1082 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அணைக்கு வினாடிக்கு 366 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 57.50 அடியாக உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 50.50 அடியாக நீடிக்கிறது. அந்த அணைக்கு வரும் 30 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இன்று காலை நிலவரப்படி 18 மில்லிமீட்டர் மழை அங்கு பதிவாகி உள்ளது.
மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பருவமழையானது விட்டுவிட்டு பெய்து வருகிறது. ராதாபுரத்தில் 67 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி,அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் இரவில் தொடங்கி அவ்வப்போது கனமழையாக பொழிந்தது. இன்று காலை வரையிலும் ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் சராசரியாக 27.27 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 74 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 65 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 56 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 30 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கொண்டு அணைக்கு வரும் நீரானது பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று பெய்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரத்தடி உள்ளிட்டவை மதகு பகுதியில் அடைத்தது. அப்போது மதகு சேதம் அடைந்தது. உடனடியாக அதனை பொறியாளர்கள் தலைமையில் ஊழியர்கள் சரி செய்தனர்.
தென்காசியில் விடிய விடிய மழை பெய்தது. அங்கு 55 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடி,சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கருப்பாநதி, கடனா நதி, அடவிநயினார் அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கடனா அணை நீர்மட்டம் 1 1/2 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடியும் அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்வால் பிசான பருவ சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேடநத்தம், சூரன்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக அங்கு 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, சாத்தான்குளம், காயல்பட்டி னம், குலசேகரன்பட்டினம், எட்டயபுரம், வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
- விபத்தில் பாலமுருகனுக்கு 2 கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார்.
- விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சீலாத்திகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருக்கு வெட்டும்பெருமாள்(வயது 20), பாலமுருகன்(17), வேல்முருகன், தமிழரசன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
அரிச்சந்திரன் தனது குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். அவரது 4 மகன்களும் நெல்லையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகின்றனர். தினமும் தூத்துக்குடியில் இருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சொந்த ஊரான சீலாத்திகுளத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர். அந்த வீட்டில் குடிபுகுவதற்காக பால் காய்ச்சப்பட்ட நிலையில், நேற்று இரவு சீலாத்திகுளத்தை சேர்ந்த தனது உறவினரான முத்தரசு(24) என்ற வாலிபரின் மினி லோடு ஆட்டோவில் தூத்துக்குடியில் தங்கியிருந்த வீட்டில் இருந்த பொருட்களை ஏற்றினர்.
நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நெல்லை நோக்கி வந்தனர். அப்போது லோடு ஆட்டோவை முத்தரசு ஓட்டி வந்தார். பாலமுருகனும், வெட்டும் பெருமாளும் இடதுபுறத்தில் அமர்ந்திருந்தனர். பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளிலும் தமிழரசுனும், வேல்முருகனும் வந்தனர். முறப்பநாடு அருகே முருகன்புரம் என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பொருட்களை மூடியிருந்த தார்ப்பாய் அவிழ்ந்து விட்டது.
இதனால் 5 பேரும் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தார்ப்பாயை அவிழ்த்து மீண்டும் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லோடு வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதி, தார்ப்பாய் கட்டிக்கொண்டிருந்த லோடு ஆட்டோவிலும் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பாலமுருகனுக்கு 2 கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார். வெட்டும்பெருமாளுக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததால் வெட்டும்பெருமாள் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. லோடு ஆட்டோ டிரைவர் முத்தரசு காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.
- இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.
கல்லறை திருநாள்
இந்த நாளில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கல்லறைகளில் மலர் அஞ்சலி செலுத்துவா ர்கள். இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையில் கல்லறை திருநாளை யொட்டி சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவினர். பின்னர் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவை களை படைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கல்லறை தோட்டம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாநகரில் பாளை, என்.ஜி.ஓ. காலனி, தச்சநல்லூர், சந்திப்பு, டவுன் உள்ளிட்ட இடங்களில் கல்லறை திருநாள் அனு சரிக்கப்பட்டது .
இதுபோன்று மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை தோட்டங்க ளுக்கு சென்று வழிபட்டனர்.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திரு இருதய ஆலயத்திற்கு சொந்தமான மணிமூர்த்தீஸ்வரம் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகளை பங்குத்தந்தை மைக்கேல் ராசு புனித நீர் கொண்டு தெளித்து ஜெபம் செய்தார்.இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,பஞ்சபாண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்.சி. கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாநகர போலீசார் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
டவுன் சாப்டர் மேல்நிலை பள்ளியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா மற்றும் போலீசார் மாணவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் (உதவி எண்:1098,181) மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் சம்பந்தமாகவும், போக்சோ சட்டம் குறித்தும், அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
- நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாரயணபெருமாள், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராய ப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, ஜெயலலிதா பேரவை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் ஆகியோர் வரவேற்று பேசினார். தலைமை பேச்சாளர் பல குரல் சந்தானம் சிறப்புரை யாற்றினார்.
அதைத்தொடர்ந்து இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. மொத்தம் 534 பொய்யான வாக்குறுதிகளை தந்துள்ளது. இதில் ஒன்றை கூட நிறை வேற்றவில்லை.
ஆயிரம் ரூபாய் அனைத்து பெண்களுக்கும் தரப்பட வில்லை. தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியுள்ளனர்.எடப்பாடியார் ஆட்சியை யும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் எடப்பாடியார் ஆட்சிதான் சிறந்ததாகும்.
நீட் தேர்வுக்கு விலக்கு வராது என்பதை தெரிந்து தான் 7.5 சதவீதத்தை கிராமப்புற ஏழை மாண வர்களுக்கு எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனால் தற்போது நீட் விலக்கு எங்கள் இலக்கு என அனை வரையும் ஏமாற்றி வருகிறார்கள்.
வருகின்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களாகிய நீங்கள் தான் அ.தி.மு.க.வுக்கு வாக்க ளித்து தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
பின்னர் ஏழை பெண்க ளுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்தரேசன், மாவட்ட இளைஞரணி இணை செய லாளர் பாலரிச்சர்டு, பொருளாளர் இந்திரன், எட்வர்ட்சிங் மற்றும்
தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
- ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக ராஜன் வேலைக்கு வரவில்லை. இதனால் வானுமாமலை அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.
மேலும் சம்பள பணத்தை உரிமையாளர் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் மோட்டார் சைக்கி சென்று அரிவாளை காட்டி மிரட்டி வானுமாமலையிடம் சம்பளத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜன், வானுமாமலையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, இதுதொடர்பாக ராஜனை கைது செய்தனர்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
- நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டம் மற்றும் மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கிய நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலமாக பெய்தது. ஒரு சில இடங்களில் பயங்கர மான இடி-மின்னலுடன் மழை பெய்தது.
மாநகரில் புதிய பஸ் நிலையம், பாளை, சமாதானபுரம், டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், கே.டி.சி.நகர், சந்திப்பு, பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான தெருக்கள் சேறும் சகதியுமாக நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் இருந்தது. ஒரு சில தெருக்களில் மழைநீர் இன்று காலை வரையிலும் தேங்கி கிடந்தது.
அணைகள் நிலவரம்
மாவட்டத்திலும் மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 60 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 59.6 மில்லிமீட்டரும், அம்பையில் 45 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் 43 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 85.35 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 1/2 அடி உயர்ந்து 98.85 அடியானது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 922.64 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 404 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. மணிமுத்தாறில் 32 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணைியல் 56.75 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாஞ்சோலை வனப்பகுதியில் விடியவிடிய கனமழை கொட்டியது. மாஞ்சோலை எஸ்டேட்டில் 7.2 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 5.2 சென்டி மீட்டரும் மழை பெய்தது. ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. செங்கோட்டையில் 60 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஆய்குடியில் 46 மில்லிமீட்டரும், சிவகிரியில் 27 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைகளை பொறுத்த வரை நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பா நதியில் 30 மில்லிமீட்டரும், குண்டாறில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தி லும் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் ஒரு சில இடங்களில் இன்று காலையிலும் மழை தொடர்கிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் இடி-மின்னலு டன் மழை பெய்தது. அதி கபட்சமாக திருச்செந்தூரில் 66 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஓட்டப்பிடா ரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் பெய்த மழையால் விவசாயி கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம், எட்டய புரம், கோவில்பட்டி, விளாத்தி குளத்திலும் பரவலாக மழை பெய்தது. காடல்குடியில் 54 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்து வரும் மழையால் தாழ்வான தெருக்க ளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
- அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்யவும் 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரி வித்துள்ளார்.
- வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வணிக மேலாண்மையியல் துறை தலைவி ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.






