search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel manager"

    • நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
    • ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.

    ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக ராஜன் வேலைக்கு வரவில்லை. இதனால் வானுமாமலை அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.

    மேலும் சம்பள பணத்தை உரிமையாளர் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் மோட்டார் சைக்கி சென்று அரிவாளை காட்டி மிரட்டி வானுமாமலையிடம் சம்பளத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

    தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜன், வானுமாமலையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, இதுதொடர்பாக ராஜனை கைது செய்தனர்.

    • ரமேஷ் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரமேசை சரமாரியாக வெட்டினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நெல்லை ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் அவர் தாழையூத்து அருகே சங்கர் நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். நேற்று நள்ளிரவு ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பினார்.

    அரிவாள் வெட்டு

    ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூருக்கு ஊருடையார்புரம் சாலையில் அவர் சென்றபோது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல் வழி மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேசை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரமேஷ் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் ராதாபுரம் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி ரமேஷ் சாமி கும்பிட சென்றுள்ளார்.

    வழக்குப்பதிவு

    அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராதாபுரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அந்த ஆத்திரத்தில் எதிர்தரப்பினை சேர்ந்த 2 பேர் ரமேசை வெட்டிக்கொலை செய்ய முயன்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    காரிமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜ் தர்மபுரியில் இருந்து செல்லும் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்ததாக தெரிகிறது. காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தார். பின்னர் பஸ் புறப்பட்ட போது கனகராஜ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×