நாங்குநேரி அருகே ஓட்டல் மேலாளருக்கு அரிவாள் வெட்டு-எலக்ட்ரீசியன் கைது

நாங்குநேரி அருகே ஓட்டல் மேலாளருக்கு அரிவாள் வெட்டு-எலக்ட்ரீசியன் கைது

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார். ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.

ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக ராஜன் வேலைக்கு வரவில்லை. இதனால் வானுமாமலை அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.

மேலும் சம்பள பணத்தை உரிமையாளர் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் மோட்டார் சைக்கி சென்று அரிவாளை காட்டி மிரட்டி வானுமாமலையிடம் சம்பளத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜன், வானுமாமலையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, இதுதொடர்பாக ராஜனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com