என் மலர்
திருநெல்வேலி
- கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் பெய்த கனமழை யின் காரணமாக காட்டாற்று வெள்ளம் மற்றும் சிறிய சிறிய ஓடைகள், கால்வாய்க ளில் நீர்வரத்து அதிகரித்து அந்த நீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் சேர்கிறது.
இதன் காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக ஆற்றில் நீர் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வேடிக்கை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மாவட் டத்தில் பெய்த கனமழையின் தாக்கத்தால் நெல்லை தச்சநல்லூர் மேலகரை பகுதியில் உள்ள பழமை யான வேப்பமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப் படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆறுமுககனி தான் வளர்த்து வரும் ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
- மதன், அருள்முத்து மணி ஆகியோர் ஆட்டை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுககனி (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று இவர் வளர்த்து வரும் ஆட்டை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். சிறிது நேரத்தி ற்கு பின் சென்று பார்த்த போது ஆட்டை காணவில்லை. ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்த அன்பழகன் மகன் மதன் (19), பெருமாள் மகன் அருள்முத்து மணி (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- குண்டு எறிதல் போட்டியில் மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தை பிடித்தார்.
திசையன்விளை:
தோவாளை எல்.எச்.எல். சி.பி.எஸ்.இ. பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுவினரால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையே விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 19, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வட்டு எறிதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி சொர்ணா, 11-ம் வகுப்பு மாணவி தியானா ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவி ஷேரன், 9-ம் வகுப்பு மாணவர் ஜாய்வின் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின், 8-ம் வகுப்பு மாணவர் பிரிஜித் ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவர் அந்தோணி ஆகாஷ் 2-ம் இடத்தையும் வென்றனர்.
குண்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தையும், 11-ம் வகுப்பு மாணவி தியானா, 8-ம் வகுப்பு மாணவி ஆஷிகா பாரிஸ் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.
நீளம் தாண்டுதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி அக்ஷயா, 12-ம் வகுப்பு மாணவர் மைக்கேல் கிராஷிங்டன் ஆகியோர் 2-ம் இடத்தையும், 11-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் 3-ம் இடத்தையும் வென்றனர்.
200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் ஜெஸ்வின் 2-ம் இடத்தையும், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
- கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- 2,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மதியம் முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயிற்சியை மேற்கொண்ட கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொண்டு சரி செய்ய நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் துணை கலெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுக்கள் என மொத்தம் 9 வட்டாரத்துக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழமான பகுதிகளுக்கு அருகே கரைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தேவையான இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நெல்லை என்ற செயலி மூலமாக பொதுமக்கள் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். 9786566111 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக பாதிப்புகளை தெரிவிக்கலாம்.
மலை கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து ஆகிய பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கிராம நிர்வாக அலுவலர் அந்தஸ்திலான அதிகாரி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு நபர் பணியில் இருப்பார். மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
2,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் அடித்து வரப்படும் கட்டைகள் நீர் வழிப்பாதையை தடுக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்.டி.ஆர்.அப் அதிகாரிகள் நேரடியாக நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை எடுத்துள்ளனர்.
கல்லூரிகளில் படிக்கும் தன்னார்வலர்கள் 200 பேருக்கு பேரிடர் கால சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது.
- தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, குண்டாறு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்க ளில் கடந்த சில நாட்க ளாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதற்கிடையே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை கார ணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
நேற்று மாலை முதலே நெல்லை மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகப்பட்சமாக பாளையங்கோட்டையில் 38 மில்லி மீட்டரும், நெல்லையில் 30.6 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 18.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
இதுபோல சேர்வலாறு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு பகுதி, கொடுமுடியாறு உள்பட மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்தது.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக எட்டயபுரத்தில் 45.4 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 29 மில்லி மீட்டரும், கயத்தாறில் 21 மில்லி மீட்டரும், கழுகுமழையில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
மேலும் கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், காயல்பட்டினம், விளாத்திகுளம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன் காடு, கொட்டன்காடு, கந்தபுரம், நேசபுரம், செட்டியாபத்து, தண்டுபத்து சீர்காட்சி, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகைவிளை, வேப்பங்காடு, மெஞ்ஞான புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் வயல்களில் களை எடுக்க முடியாமலும், களை கொல்லி மருந்து அடிக்காமலும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கருப்பாநதி பகுதியில் 37 மில்லி மீட்டரும், கடனா நதியில் 18 மில்லி மீட்டரும், அடவி நயினார் பகுதியில் 15 மில்லி மீட்டரும், சிவகிரியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, குண்டாறு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பதிவாகியது.
சிவகிரி அருகே தேவிபட்டிணம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 26). மராட்டியத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த அவரை மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
சிவகிரி, வாசுதேவ நல்லூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. தண்ணீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் தவித்தனர்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் காரணமாகவே பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 98.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் ஒரு அடி உயர்ந்து 99.28 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் பிற்பகலில் அணை 100 அடியை எட்டியது.
பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 87.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 924.063 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 409.65 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கடனாநதி,ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் இன்று தலா ஒரு அடி உயர்ந்தது.
- கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்துள்ளது. இதனால் கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
- காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், நெல்லையில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிப்பதற்காகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று சென்னையில் இருந்து ரெயில் மூலம் நெல்லை வந்தார்.
அவருக்கு நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர்கள் சங்கர பாண்டியன், கே.பி.கே. ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் கட்சியில் இருக்கும் அணிபோல் பா.ஜ.க. வின் அணியாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. பா.ஜ.க. தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டு அவை செயல்படுகிறது. வருமானவரித்துறை செய்வது பொறுப்பற்ற செயல். தமிழகம், ராஜஸ்தான், கேரளா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் வருமானவரித்துறை சோதனை செய்வது பா.ஜ.க. வின் அரசாட்சி தோல்வியடைந்ததற்கு உதாரணம்.
எதிர்கட்சிகள் ஆளாத பிற மாநிலங்களில் சோதனை செய்ததே கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் அவரை சிறையில் வைத்துள்ளனர்.
இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான டெல்லி முதல்-அமைச்சரை விசாரணைக்கு அழைத்து அவர் வர மறுத்து விட்டார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் யாரையும் விசாரணைக்கு இதுவரை அழைத்தது கிடையாது.
இந்தியா கூட்டணியை திராவிட முன்னேற்ற கழகம் வலிமையாக வழி நடத்துகிறது என்பதற்காக திமுக.விற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சோதனை நடப்பது அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரிகிறது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு அரசு கவர்னருக்கு அனுப்பிய கோப்பில் இதுவரை கையெழுத்திடவில்லை. அ.தி.மு.க.வினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட கவர்னர் தயாராக இல்லை. நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டும்தான் நீட் பயன் பெறும். மாநில அரசு பாடத்திட்டங்களில் படிப்பவர்களுக்கு நீட் எந்த வகையிலும் பயன் தராது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரப்பிரசாதமாகவும், அவர்கள் பணத்தை வாரி குவிப்பதற்கும் உதவிகரமாக அமைகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
சாதியின் பெயரைச் சொல்லி சண்டையில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். நாட்டில் பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உரிமை கிடையாது. வரட்டும் பார்ப்போம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இறையாண்மை உள்ளது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.
- மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது நீர் இருப்பு 50.50 அடி உள்ளது.
இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலமைச்சர் உத்தரவுபடி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 5,780 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை 150 நாட்களுக்கு 100 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கவர்னர் மீது ஆளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து கூறியதாவது:-
தமிழக சட்டமன்றம், அமைச்சரவை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் நமது கவர்னர் அதனை படித்து பார்ப்பது கூட கிடையாது. இதனால் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகிறது.
சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இறையாண்மை உள்ளது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது.
சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் இதுபோன்று கவர்னருக்கு அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என அதாவது குறிப்பாக ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்க வேண்டும் என பேசி உள்ளேன்.
இதுவரை அவர்கள் எந்த முடிவும் எடுக்காத நிலையில் நமது முதலமைச்சர், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார். இதுபோன்று அண்டை மாநிலமான கேரளாவும் நீதிமன்றம் சென்றுள்ளது. இப்படி செயல்படும் கவர்னர்களை தற்போது ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது விநோதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேதாஜி போஸ் சந்தையில் 75 கடைகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டபட்டுள்ளது.
- ஆய்வில் துணை கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை டவுண் பகுதியில் கட்டப்பட்டுள்ள நேதாஜி போஸ் சந்தையில் 75 கடைகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டபட்டுள்ளது.
அதனை மாநகராட்சி மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விடுபட்ட இடங்களில் கட்டிடத்தினை சுற்றிலும் சாலை அமைக்கவும், அடித்தளத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான வடிவ மைப்பு களை மேற்கொ ள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வில் துணை கமிஷனர் தாணுமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் பேரின்பம், உதவி வருவாய் அலுவலர் சிவனையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தில்லைநாயகம் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- கைதான பூமிஜாவின் சொந்த ஊர் மூவிருந்தாளி கிராமம் ஆகும்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 71). இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்திருந்தார்.
அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கையில் வைத்திருந்த கட்டைப் பையில் வைத்துவிட்டு வங்கியில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் ஒரு பேக்கரி கடை முன்பு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதன் கீழ் பகுதி கிழிக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தில்லை நாயகம் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக இன்ஸ்பெ க்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது தில்லை நாயகத்தை பின்தொடர்ந்து ஒரு இளம் பெண் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மற்றும் சில காமிராக்களில் ஆய்வு செய்தபோது அந்த இளம் பெண், தில்லைநாயகம் கையில் வைத்திருந்த கைப்பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக நழுவி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளம் பெண் தச்சநல்லூர் தேனீர் குளத்தைச் சேர்ந்த பிளம்பரான ரஞ்சித் குமார் என்பவரது மனைவி பூமிஜா (வயது 28)என்பதும், அவர் நர்சிங் முடித்திருப்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த பெண் மீது டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்த விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை பூமிஜா வை சந்திப்பு போலீ சார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் போலீஸ் நிலையத்தில் முகவரியை மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான பூமிஜாவின் சொந்த ஊர் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமம் ஆகும். இவர் கடந்த 10 நாட்களாக அங்கிருந்து பஸ்சில் நெல்லை நகர பகுதிக்குள் வந்து கூட்ட நெரிசல் உள்ள பஸ்களில் ஏறி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 பர்ஸ்கள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நேர்காணல் நாளை மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது.
- புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நெல்லை கிழக்கு மாவட்ட த்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை ( சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் மாநில இளைஞரணி செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, ராஜா, இளையராஜா, பிரகாஷ், சீனிவாசன், ஆனந்தகுமார், அப்துல் மாலிக், பிரபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நேர்காணலில் வந்து கலந்து கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பம் செய்வோரும் நேரடியாக வந்து விண்ணப்பித்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து வந்து நேர்காணலில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஹரிஷ் வீட்டின் மாடியில் நிறுத்தியிருந்த சைக்கிள் நேற்று முன்தினம் காணாமல் போனது.
- தினகரன் என்பவர் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ். (வயது 18). இவரின் வீட்டின் மாடியில் நிறுத்தியிருந்த சைக்கிள் நேற்று முன்தினம் காணாமல் போனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.
அதில் பேட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தினகரன்(35) என்பவர் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர்.






