search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    3 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

    • போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • குண்டு எறிதல் போட்டியில் மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தை பிடித்தார்.

    திசையன்விளை:

    தோவாளை எல்.எச்.எல். சி.பி.எஸ்.இ. பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுவினரால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையே விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இப்போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 19, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வட்டு எறிதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி சொர்ணா, 11-ம் வகுப்பு மாணவி தியானா ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவி ஷேரன், 9-ம் வகுப்பு மாணவர் ஜாய்வின் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    உயரம் தாண்டுதல் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின், 8-ம் வகுப்பு மாணவர் பிரிஜித் ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவர் அந்தோணி ஆகாஷ் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    குண்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தையும், 11-ம் வகுப்பு மாணவி தியானா, 8-ம் வகுப்பு மாணவி ஆஷிகா பாரிஸ் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    நீளம் தாண்டுதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி அக்ஷயா, 12-ம் வகுப்பு மாணவர் மைக்கேல் கிராஷிங்டன் ஆகியோர் 2-ம் இடத்தையும், 11-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் ஜெஸ்வின் 2-ம் இடத்தையும், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×