என் மலர்
திருநெல்வேலி
- ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
- அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா அறிவுரைகள் வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் ராதாபுரம் தொகுதிக்கான அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா, ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் ராதாபுரம் தொகுதியில் உள்ள பூத் கமிட்டி நோட்டுகள் சரி பார்க்கப்பட்டு அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல்ராயப்பன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்த ரேசன், மகளிரணி செய லாளர் ஜான்சி ராணி, வள்ளியூர் பொருளாளர் இந்திரன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலரிச்சர்ட்டு, ஞானபுனிதா, அருண் குமார், எட்வர்ட்சிங், நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள் பூத் கமிட்டி யின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடி வில் பா.ஜ.க., தி.மு.க. வை சேர்ந்த 10 பேர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை இணைத்துகொண்டனர்.
- பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
- சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.
நெல்லை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஜவுளிகள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.
நெல்லை
நெல்லை மாநகரை பொருத்தவரை டவுன் ரதவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. பெரிய ஜவுளிகடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
மேலும் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டி கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவதற்கு நடுத்தர மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் புதிதாகவும், ஏராளமான பிளாட்பாரம் ஜவுளிக்கடைகள் தோன்றி உள்ளன. அங்கு சலுகை விலைகளில் விற்கப்படும் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அங்குள்ள பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடி
இதேபோல் வண்ணார்பேட்டையிலும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.
இதுதவிர பலகாரங்கள் வாங்கும் கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவற்றி லும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் பஜார்களில் ஜவுளிகடைகள், நகை கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், திருட்டை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டவுனில் 4 ரதவீதிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காமிராக்கள் தவிர கூடுதலாக நவீன காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
இதுதவிர வடக்கு ரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து மாநகர போலீசார் கூட்ட நெரிசலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கான பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் ஆதர்ஸ் பசேரா, அனிதா, சரவண குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் ஜவுளி கடைகளை நோக்கி பொதுமக்கள் படை யெடுத்து வருகின்றனர்.
சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதி களிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. தென்காசி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர பகுதிகள் மற்றும் கோவில்பட்டி, திருச் செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஜவுளி கடைகள் முன்பு திரளான மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.
இன்று விடுமுறையை யொட்டி காலை முதலே பொதுமக்கள் குடும்பத்தி னருடன் சென்று தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.
- ராமனை பார்க்க வந்த சப்பானி முத்து, ராணி என்பவரை அறிமுகம் செய்துள்ளார்.
- ராமனை கடத்தி சென்று பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.
நெல்லை:
பாளை கீழநத்தம் தெற்கூர் கண்ணப்பன் காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). தொழிலாளி.
இவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பணம் விவகாரம் தொடர்பாக ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் ஊமை காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமன் ஆகஸ்டு 12-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து பாளை தாலுகா போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக சாதாரண வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தனர்.
தற்போது ராமன் மனைவி ராமலட்சுமி மறு விசாரணை நடத்த கோரி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கும்பல் ராமனை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பன்னீர்குளம் பகுதியை சேர்ந்தவர் சப்பானி முத்து( 52). இவரும், ராமனும் உறவினர்கள். கடந்த 2020-ம் வருடம் ஜூலை மாதம் ராமனை பார்க்க வந்த சப்பானி முத்து பாளை பகுதியை சேர்ந்த ராணி (56) என்பவரை அறிமுகம் செய்துள்ளார். அப்போது வெளிநாட்டிலுள்ள தொண்டு நிறுவனத்திலிருந்து ராணிக்கு ரூ. 50 லட்சம் பணம் வரவுள்ளது. அதனை உனது வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள். பணம் வங்கிக் கணக்கில் ஏறியவுடன் அதனை எடுத்து தருமாறு ராமனிடம் சப்பானி முத்துவும், அந்த பெண்ணும் கூறியுள்ளனர். அதன்படி அவரது வங்கி கணக்கிற்கு ரூ.49 லட்சத்து 95 ஆயிரம் பணம் வந்துள்ளது. ஆனால் ராமன் ரூ.13 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு மீதி உள்ள 37 லட்சம் ரூபாயை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணி, சப்பானி முத்துவை வரவழைத்துள்ளார். அவர்கள் மணக்கரை கிராமத்தை சேர்ந்த அவரது கூட்டாளிகள் 3 பேரை வரவழைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ராமனை அவர்கள் கடத்தி சென்று பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ராமன் படுகாயம் அடைந்தார். சிகிச்சையில் இருந்த ராமன் 3 மாதங்களில் இறந்து விட்டார் என்ற விவரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து கொலை வழக்குப்பதிந்து ராணியை கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம் என்றனர்.
- பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
- பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூர், கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டபிள்ளைபுதூர் சாஸ்தா கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த உன்னங்குளத்தை சேர்ந்த சின்ராஜ் (21) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவக்குமார் டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
- கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமார் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). இவருக்கும், நெல்லை பேட்டை சத்யா நகரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணமாகி 50 நாட்களே ஆன குழந்தை உள்ளது. இதனால் சிவக்குமார் பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் இருந்தவாறு டவுனில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிவக்குமார் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடியபடி கும்மியடித்தனர்.
- கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பகுதியிலுள்ள நாரம்பூநாதர் பனங்காட்டில் நெல்லை நீர்வளம் மற்றும் முக்கூடல் பொழில் தன்னார்வலர்கள் அறக் கட்டளை இணைந்து சுமார் 30 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு விழா நடை பெற்றது.
கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனைவிதையை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், அறநிலைய துறை கவிதா, சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் ஆகியோர் பனை விதைகளை விதைத்தனர்.
தொடர்ந்து இலந்தை குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடிய படி கும்மியடித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கும்மியடித்ததை அவரது செல்போனில் வீடியோ எடுத்த கலெக்டர் கார்த்திகேயன், அந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
குறிப்பாக கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள். தற்போது பனைமரம் குறித்து கும்மி பாட்டு பாடியதை கலெக்டர் மட்டு மல்லாமல் அனை வரும் ஆச்சரியத்துடன் ரசித்து பாராட்டினர்.
மேலும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு மாவட்ட கலெக்டர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
விழாவில் தோட்டக் கலை துறை உதவி இயக்கு னர் சுபாசினி, நெல்லை வனச்சரக அலுவலர் சரவணக்குமார்,சேரன் மகாதேவி தாசில்தார் ரமேஷ், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சோழ முடி ராஜன், பணி புஷ்பம், வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா லட்சுமணன், துணை தலைவர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரி, ஊராட்சி செயலர் கவிதா மற்றும் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொழில் அமைப்பு தலைவர் எட்வின் ஹென்றி, ஹர்ட் புலனஸ் மெடிட்டே சன் கணேசன் மற்றும் ஜெயந்த் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஊச்சிக்குளம் விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஊச்சிக்குளம் விலக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை டவுன், வயல்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கடமுடா முருகன் (வயது 39), தாழையூத்து, கரையிருப்பு, வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகி யோர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ 750 கிராம் புகையிலை பொரு ட்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது.
- உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.
களக்காடு:
களக்காடு நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், பொது மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து களக்காடு நகராட்சி சார்பில், சிதம்பர புரம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ள இலவடி அணை அருகே புதிதாக உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது உறை கிணறு அமைக்கும் பணிகள் முடி வடைந்துள்ளது. கிணற்றில் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது.
அதுபோல உறை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணி களும், மின் இணைப்பு பணி களும் நிறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்து, கிணற்றில் இருந்து நீர் எடுத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இன்னும் உறை கிணறு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உறை கிணறுக்கு வழங்கப் பட்டுள்ள மின் வினியோக குறைபாட்டால் உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
மேலும், உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. வீடுக ளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த உறை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் களக்காடு நகராட்சி பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்கலாம் என்றும், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். எனவே மின் வினியோக குறைபாட்டை சரி செய்து, உறை கிணற்றை பயன் பாட்டுக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் அந்த அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்து இன்று காலை 88.35 அடியானது. அந்த அணை பகுதியில் 34 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 2 அடி அதிகரித்து 101.41 அடியானது. அந்த அணை பகுதியில் 43 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த அணைகளுக்கு 913 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.50 அடியாக உள்ளது. அணைக்கு 371 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரித்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்று காலையில் இருந்து மாவட்டத்தில் வெயில் அடிக்க தொடங்கியது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்றாலும் கனமழை பெய்யக்கூடும் என அச்சமடைந்து சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு வருவதை தவிர்த்துள்ளனர். குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் மட்டும் குளித்து வருகின்றனர்.
குறிப்பாக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இன்று காலை நிலவரப்படி அங்கு 9.7 சென்டிமீட்டர் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கயத்தாறு, சாத்தான்குளம், கீழ அரசடி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியது. எட்டயபுரம், வைப்பார், சூரன்குடி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. அதிகபட்சமாக வேடநத்தம் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
- அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
- பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
நடப்போம் நலம் பெறு வோம் என்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகர் சந்திப்பில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டது. அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீண்டும் உதயா நகர் சந்திப்பை வந்தடைந்தது.
இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டனர்.
சுகாதார நடைபாதை என்.ஜி.ஓ. காலனி வட்டார போக்குவரத்து அலுவலக சாலை உதயா நகர் சந்திப்பில் இருந்து மிதிவண்டி பாதை அன்னை திருமண மண்டபம், ஜெபா கார்டன், மூன் மஹால் சந்திப்பு, தாமிரபதி காலனி வரை சென்று மீண்டும் உதயாநகர் சந்திப்பு வரை 8 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுகாதார நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், ஓய்வெ டுப்பதற்கான பகுதிகள் மற்றும் அமர்வ தற்கான நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை உட்பட அனைத்து சுகாதார பரிசோதனைகளும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்ப டுத்தி நடப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டு தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, மண்டல தலைவர் கதீஜாஇக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள்அம்பிகா, சகாய ஜூலியட், சங்கீதா, முத்து சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலி யர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார்.
நெல்லை:
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி முதற் கட்டமாக தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு பணி நெல்லை மாநகராட்சி யில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மலக்கசடு கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல்,பொது சமுதாய நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்தல், கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு மற்றும் பரா மரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய தூய்மை பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுவார்கள்.
கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வரு கிறார்கள்.
நெல்லையில் நடை பெறும் தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளார்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளவேண் டும் என அவர் கேட்டு கொண்டார்.
தொடர்ந்து அவர் 13-வது வார்டு அலுவல கத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். பின்னர் கணக்கெடுப்பு பணியா ளர்களுக்கு வுரை வழங்கி னார். தகுதி வாய்ந்த தூய்மை பணி யாளர்களை விடு படாமல் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.
- தாயம்மாள் மினி மாரத்தானில் வெள்ளி வென்றார்.
நெல்லை:
அண்ணா பல்கலைக் கழகம் மண்டலம் நெல்லை சார்பில் சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் மகளிருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லிஸ்பா நீளம் தாண்டுதல், 200 மீட்டர் மற்றும் 4x100 ரிலேயில் தங்கம் வென்றார்.
மாணவி ஜெயா மிஸ்பா 400 மீட்டர் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர், 40x400 ரிலேவில் தங்கமும் வென்றார். மாணவி ஜென்னி மார்க்ஸ் 100 மீட்டரில் தங்கம் ,100 மீட்டர் தடை தாண்டுதல், 4x100 ரிலே ஆகியவற்றில் தங்கம் வென்றார்.
தாயம்மாள் 5 ஆயிரம் மீட்டர், 4x400 மீட்டர் ஆகியவற்றில் தங்கம், மினி மாரத்தானில் வெள்ளி வென்றார். மாணவி போஜாக்ஸியோ 4x400 ரிலேவில் தங்கமும், மான்யா நீளம் தாண்டுதலில் வெள்ளியும், 4x100 ரிலேவில் தங்கமும் வென்றனர்.
மாணவி காரிய லட்சுமி தேவி 100 மீட்டரில் வெண்கலமும், 100 மீட்டரில் வெள்ளியும், 4x100 ரிலே தங்கமும் வென்றார். இன்பான்ட் நிவானா 400மீட்டர், 800 மீட்டர், 4x400 ரிலேவில் தங்கமும் வென்றர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்த எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா கேப்ரியல், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவிகளை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் ப்ரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.






