search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walking Training Track"

    • அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நடப்போம் நலம் பெறு வோம் என்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகர் சந்திப்பில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டது. அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீண்டும் உதயா நகர் சந்திப்பை வந்தடைந்தது.

    இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    சுகாதார நடைபாதை என்.ஜி.ஓ. காலனி வட்டார போக்குவரத்து அலுவலக சாலை உதயா நகர் சந்திப்பில் இருந்து மிதிவண்டி பாதை அன்னை திருமண மண்டபம், ஜெபா கார்டன், மூன் மஹால் சந்திப்பு, தாமிரபதி காலனி வரை சென்று மீண்டும் உதயாநகர் சந்திப்பு வரை 8 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுகாதார நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், ஓய்வெ டுப்பதற்கான பகுதிகள் மற்றும் அமர்வ தற்கான நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பாதை பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை உட்பட அனைத்து சுகாதார பரிசோதனைகளும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்ப டுத்தி நடப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டு தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, மண்டல தலைவர் கதீஜாஇக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள்அம்பிகா, சகாய ஜூலியட், சங்கீதா, முத்து சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலி யர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×