என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி படுகாயம்
By
மாலை மலர்5 Nov 2023 2:30 PM IST

- பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
- பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூர், கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டபிள்ளைபுதூர் சாஸ்தா கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த உன்னங்குளத்தை சேர்ந்த சின்ராஜ் (21) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X