search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கூடல் அருகே பனைவிதை விதைப்பு விழா- கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
    X

    பனை விதை விதைப்பு விழாவை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    முக்கூடல் அருகே பனைவிதை விதைப்பு விழா- கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

    • பெண்கள் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடியபடி கும்மியடித்தனர்.
    • கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பகுதியிலுள்ள நாரம்பூநாதர் பனங்காட்டில் நெல்லை நீர்வளம் மற்றும் முக்கூடல் பொழில் தன்னார்வலர்கள் அறக் கட்டளை இணைந்து சுமார் 30 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு விழா நடை பெற்றது.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனைவிதையை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், அறநிலைய துறை கவிதா, சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் ஆகியோர் பனை விதைகளை விதைத்தனர்.

    தொடர்ந்து இலந்தை குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடிய படி கும்மியடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கும்மியடித்ததை அவரது செல்போனில் வீடியோ எடுத்த கலெக்டர் கார்த்திகேயன், அந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    குறிப்பாக கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள். தற்போது பனைமரம் குறித்து கும்மி பாட்டு பாடியதை கலெக்டர் மட்டு மல்லாமல் அனை வரும் ஆச்சரியத்துடன் ரசித்து பாராட்டினர்.

    மேலும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் தோட்டக் கலை துறை உதவி இயக்கு னர் சுபாசினி, நெல்லை வனச்சரக அலுவலர் சரவணக்குமார்,சேரன் மகாதேவி தாசில்தார் ரமேஷ், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சோழ முடி ராஜன், பணி புஷ்பம், வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா லட்சுமணன், துணை தலைவர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரி, ஊராட்சி செயலர் கவிதா மற்றும் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொழில் அமைப்பு தலைவர் எட்வின் ஹென்றி, ஹர்ட் புலனஸ் மெடிட்டே சன் கணேசன் மற்றும் ஜெயந்த் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×