என் மலர்
திருநெல்வேலி
- சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கினார்.
- கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
நெல்லை:
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவ லகம் மற்றும் கிராம உதயம் கோபால சமுத்திரம் இணைந்து பசுமை தீபாவளியை கொண்டாடும் வகையில் சேரன்மகாதேவி யில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் பராமரித்தல் மற்றும் 2 ஆயிரம் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியை சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கி சிறப்புரையாற்றினார். கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். கிராம உதயம் நிர்வாக மேலா ளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்ரமணியம், சசிகலா, குமாரி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதயம் உறுப்பினர்கள், பொதுமக்கள், கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையை கடக்க முயற்சி செய்த போது முத்துலெட்சுமி மீதுஅரசு பஸ் மோதியது.
- படுகாயமடைந்த முத்துலெட்சுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
களக்காடு:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி, மணலி விளையை சேர்ந்தவர் ரவி மனைவி முத்துலெட்சுமி (வயது39). இவர் கடந்த 4-ந் தேதி நாங்குநேரி அருகே உள்ள பெருமாள்நகரில் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அந்த வழியாக நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து லெட்சுமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த கூறியதால் சேகருக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த சேகர் குடும்பத்தினரும், கிருஷ்ணன் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது 48). விவசாயி. இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, அதே தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டு முன் நின்ற மோட்டார் சைக்கிள் இடைஞ்சலாக இருந்துள்ளது.
இதனைதொடர்ந்து சேகர், அதனை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சேகர் குடும்பத்தி னரும், கிருஷ்ணன் குடும்பத்தினரும் ஒருவருக் கொருவர் கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் சேகர் தரப்பில் சேகர், அவரது மனைவி பூமாதேவி, மகள் பவித்ரா (21), மகன் அரவிந்த்குமார் (25), ஆகியோரும், கிருஷ்ணன் தரப்பில் அவரது மகள் அமுதா (41), மகன்கள் அருணாச்சலம் (34), கார்த்திக் ராஜா (27) மாரி யப்பன் மகன் சூர்யா (23) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சேகர், பூமாதேவி, பவித்ரா, அரவிந்த் குமார் ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், அமுதா, அருணாச்சலம், கார்த்திக், சூர்யா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரன்கோவில், சிவகிரி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.
- கனமழையால் அவை கெட்டுவிடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் நேற்று மாலை நேரத்தில் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, அம்பை ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரையிலும் கனமழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 75.8 மில்லிமீட்டரும், அம்பையில் 60 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 56 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாநகரிலும் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், கேடிசி நகர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் அணையின் நீர் இருப்பு 89.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர் இருப்பு 102.62 அடியாகவும் உள்ளது.
அந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 693 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்திற்காக வினாடிக்கு 404 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சற்று அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை 48.25 அடியாக உள்ள நிலையில் 50 அடி கொண்ட வடக்கு பச்சையாறு அணை மட்டும் தொடர்ந்து 9 அடியாகவே நீடித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த நிலையில் நேற்றும் மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் இரவு முழுவதும் நீடித்த மழையால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் தடை செய்யப்பட்டது. செங்கோட்டையில் 62 மில்லிமீட்டரும், தென்காசியில் 48.5 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை கடனா அணை பகுதியில் 58 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணை நீர்மட்டம் 3 அடி அதிகரித்து 69.50 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி அதிகரித்து 70 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் நேற்று 56 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 58.07 அடியானது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் 111 அடியாகவும், குண்டாறு அணை 30.50 அடியாகவும் நீடிக்கிறது. தொடர்மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 92 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. கோவில்பட்டி, எட்டயபுரம், வேடநத்தம், சூரன்குடியில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புதியம்புத்தூரில் 10 நாட்களாக பெய்து வரும் மழையால் மானாவாரி பயிர்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவை வளர்ச்சியின்றி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அங்கு உளுந்து, பாசிப்பயறு, கம்பு உள்ளிட்டவை விதைக்கப்பட்டிருக்கும் நிலையில் கனமழையால் அவை கெட்டுவிடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
- மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
- கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). இவர் மூன்றடைப்பு அருகே உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலதி (20). இவரும் கண்ணன் வேலை பார்த்த அதே நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. சில மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்த நிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக சமீபத்தில் மாலதியின் பெற்றோரிடம் கண்ணன் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர் கண்ணனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கண்ணனும், மாலதியும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நெல்லையில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலதியின் தாயார் புதுமண தம்பதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மகள் மற்றும் மருமகனிடம் திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். மேலும் வீட்டில் அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டதாக கூறி சொந்த ஊருக்கு 2 பேரையும் அவர் அழைத்துள்ளார்.
அதை நம்பிய கண்ணன் தனது மனைவியுடன் புறப்பட்டார். தொடர்ந்து 3 பேரும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொன்னாக்குடி விலக்கு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் 3 பேரும் இறங்கி உள்ளனர்.
அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் கண்ணனை தாக்கி விட்டு மாலதியை காரில் கடத்தி சென்றது. அப்போது மாலதியின் தாயாரும் அந்த காரில் புறப்பட்டு சென்று விட்டார்.
உடனடியாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கடத்தி சென்ற கும்பல் குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் மாலதியின் குடும்பத்தினர் அவரை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதற்காக மாலதியை நைசாக பேசி நம்ப வைத்து அவரது தாயாரை வைத்து அழைத்து வந்ததும், பஸ்சை பின் தொடர்ந்து காரில் மாலதியின் தாய்மாமன்கள் வந்து மாலதியை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
- மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
- சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும்.
இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதுதவிர கோழி, மீன், கருவாடு, மாடு உள்ளிட்டவையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வியாபாரிகளின் கூட்டமும், ஆடுகள் வாங்க வருபவர்களின் கூட்டமும் அலைமோதி காணப்படும். வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவை சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சிறிய குட்டிகளை விட பெரிய ஆடுகளை அதிக ஆர்வத்துடன் கறிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றனர்.
தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், தொடர்ந்து அவர்கள் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
சிறிய குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. செம்பி கிடா ஒன்று ரூ.35 ஆயிரத்துக்கும், சண்டகிடா ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதுதவிர செங்கிடா, கன்னி கிடா உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தீபாவளியையொட்டி சந்தையில் அமோக விற்பனை நடப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான வியாபரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.
- பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு மேயர் அறிவுரை வழங்கினார்.
- பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மேயர் சரவணன் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.
மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
- டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதனை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்கள் குறித்த விபரங்களை சரிபார்த்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் வி.கே. முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்க மீரான்மைதீன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கல்லூர் பாலா, ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் நவநீதன், தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மான், வட்ட செயலாளர் வேல்முருகன், ஆறுமுகம், மலை கண்ணன், தொப்பி காஜா, செல்வகுமார், ஜாய் மரகதம், சாலி மவுலானா, மைதீன் பிள்ளை, சாகுல் ஹமீது, அலி, முத்துச்சாமி, வேல்சாமி பாண்டியன், தர்வேஸ் மைதீன், காதர் ஒளி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.
- கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதிகளை செய்து கொடுக்கப்பட்டது.
நெல்லை:
பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய நலக்கூடத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணைச் செயலாளரும், கீழநத்தம் ஊராட்சி மன்ற தலைவருமான அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் அங்கு வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட புது வாக்காளர்களுக்கு பூங்கொத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை மத்திய ஒன்றிய ஆதிராவிடர் நல அமைப்பாளர் செல்லப்பா, மீனவர் அணி அமைப்பாளர் நெல்லையப்பன், காங்கிரஸ் அமைப்பாளர் ஜோஸ்லின், இளைஞர் அணி ஆதி, தலையாரி வேல்பாண்டி, பணித்தள பொறுப்பாளர் சோபனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள்.
- மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மண் அடுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள். இதற்காக ரேஷன் கடைக ளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது அரசு சார்பில் மண்பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும். இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
எனவே பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் இலவச மின்விசை சக்கரம், கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், களிமண் எடுப்ப தற்கான ஆணை, தொழில் கடன் உள்ளிட்ட வழிவகை களை ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
பாளையை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியில் சேர்ந்த நான் சுமார் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றேன்.
அதன் பின்னர் பணியில் சேர வந்தபோது கல்வித் துறை அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே வருகை பதிவேட்டில் கையெழுத்து விடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கு மாறு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை கல்வித் துறை அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்கள் என கூறி யுள்ளார்.
மாணவ-மாணவிகள்
மானூர் தாலுகா வாகை குளம் அருகே உள்ள செ.மருதபுரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்கள் அந்த பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்க ளுடன் வந்து அளித்த மனுவில், மருதபுரம் கிராமத்தில் அம்மா விளை யாட்டு மைதானம் அமைக் கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுக்காக அவ்விடம் அமைக்கப் பட்டது. தற்போது அந்த இடத்தை பிரதம மந்திரி அவாஸ் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு வழங்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்து அளவீடு செய்து வருகின்றனர்.
இதனை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்தி மீண்டும் விளையாட்டு மைதானமாக தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.
- புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பொது மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
மேற்கு புறவழிச்சாலை திட்டம்
தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்து ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வித மாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு புற வழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த உத்தர விட்டார்.
பணிகள் மும்முரம்
அதன் அடிப்படையில் தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த புறவழிச்சாலை யானது தாழையூத்து, சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டி, ராமலிங்க நேரி, அபிஷேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, கோபால சமுத்திரம் வழியாக முன்னீர் பள்ளம் சென்று பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழி சாலையை அடைகிறது.
கூடுதலாக 5 கிலோ மீட்டர்
இந்த சாலை பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு பெரும்பாலான இடங் களில் எல்லை கற்களும் நடப்பட்டு விட்டது. ஆனால் இந்த பாதையில் தனிப்பட்ட நபர் ஒருவர் நிலம் இருப்ப தால் அந்த பகுதியில் உள்ள சாலையை மாற்றி வேறு பாதையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள் ளதாக தெரிகிறது.
இதனால் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை இருக்கிறது. நில எடுப்பு செய்வது தொடர்பாக அதன் உரிமை யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தற்போது புதிய பாதையை பரிசீலனை செய்வது வேடிக்கையாக உள்ளது.
விபத்து அதிகம்
தாழையூத்து ஊராட்சியில் 18 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் சங்கர் மேல் நிலைப்பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் அந்த வழியாக புறவழிச் சாலை அமைந்தால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே நாரணம்மாள் புரம் பகுதி 1 வழியாக இந்த புறவழிச்சாலையை அமைப்பதற்கு ஊர் பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். புறவழிச் சாலை என்பது ஊருக்கு முன்பு தான் தொடங்க வேண்டுமே தவிர ஊருக்கு உள்ளே வரக்கூடாது.
எனவே மாவட்ட கலெக்டர் இதனை மறு ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்தபடி மேற்கு வழி சாலையை ஐ.சி.எல். நியூ காலனி குடியிருப்பு அருகே நாரணம்மாள்புரம் கிராமம் வழியாக தொடங்கும் வகை யில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
- சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.
திசையன்விளை:
தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார். அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக சேர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீக்கல் குறித்த தகவ ல்களை கேட்டறிந்தார். முகாமிற்கு மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.
இதில் தி.மு.க. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான சுரேஷ் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி எஸ்தாக் கெனிஸ்டன், சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், ஒன்றிய துணை செயலாளர் கென்னடி, நவலடி சரவணகுமார், பொன்னி சக்கி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






