search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழையூத்து ஊருக்குள் செல்வதை தவிர்த்து மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை நாரணம்மாள்புரத்தில் தொடங்க வேண்டும்- கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
    X

    வடக்கு தாழையூத்து ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

    தாழையூத்து ஊருக்குள் செல்வதை தவிர்த்து மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை நாரணம்மாள்புரத்தில் தொடங்க வேண்டும்- கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.
    • புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பொது மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    மேற்கு புறவழிச்சாலை திட்டம்

    தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்து ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வித மாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு புறவழிச் சாலை திட்டம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை வந்த முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு புற வழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த உத்தர விட்டார்.

    பணிகள் மும்முரம்

    அதன் அடிப்படையில் தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த புறவழிச்சாலை யானது தாழையூத்து, சத்திரம் புதுக்குளம், ராமையன்பட்டி, ராமலிங்க நேரி, அபிஷேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், கொண்டாநகரம், சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, கோபால சமுத்திரம் வழியாக முன்னீர் பள்ளம் சென்று பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழி சாலையை அடைகிறது.

    கூடுதலாக 5 கிலோ மீட்டர்

    இந்த சாலை பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு பெரும்பாலான இடங் களில் எல்லை கற்களும் நடப்பட்டு விட்டது. ஆனால் இந்த பாதையில் தனிப்பட்ட நபர் ஒருவர் நிலம் இருப்ப தால் அந்த பகுதியில் உள்ள சாலையை மாற்றி வேறு பாதையில் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள் ளதாக தெரிகிறது.

    இதனால் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை இருக்கிறது. நில எடுப்பு செய்வது தொடர்பாக அதன் உரிமை யாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தற்போது புதிய பாதையை பரிசீலனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    விபத்து அதிகம்

    தாழையூத்து ஊராட்சியில் 18 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் சங்கர் மேல் நிலைப்பள்ளியில் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் நிலையில் அந்த வழியாக புறவழிச் சாலை அமைந்தால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே நாரணம்மாள் புரம் பகுதி 1 வழியாக இந்த புறவழிச்சாலையை அமைப்பதற்கு ஊர் பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். புறவழிச் சாலை என்பது ஊருக்கு முன்பு தான் தொடங்க வேண்டுமே தவிர ஊருக்கு உள்ளே வரக்கூடாது.

    எனவே மாவட்ட கலெக்டர் இதனை மறு ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்தபடி மேற்கு வழி சாலையை ஐ.சி.எல். நியூ காலனி குடியிருப்பு அருகே நாரணம்மாள்புரம் கிராமம் வழியாக தொடங்கும் வகை யில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×