search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களை கட்டிய தீபாவளி விற்பனை- நெல்லை டவுன் வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஜவுளிகள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாநகரை பொருத்தவரை டவுன் ரதவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. பெரிய ஜவுளிகடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    மேலும் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டி கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவதற்கு நடுத்தர மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் புதிதாகவும், ஏராளமான பிளாட்பாரம் ஜவுளிக்கடைகள் தோன்றி உள்ளன. அங்கு சலுகை விலைகளில் விற்கப்படும் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அங்குள்ள பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடி

    இதேபோல் வண்ணார்பேட்டையிலும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.

    இதுதவிர பலகாரங்கள் வாங்கும் கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவற்றி லும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் பஜார்களில் ஜவுளிகடைகள், நகை கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், திருட்டை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டவுனில் 4 ரதவீதிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காமிராக்கள் தவிர கூடுதலாக நவீன காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    இதுதவிர வடக்கு ரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து மாநகர போலீசார் கூட்ட நெரிசலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கான பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் ஆதர்ஸ் பசேரா, அனிதா, சரவண குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் ஜவுளி கடைகளை நோக்கி பொதுமக்கள் படை யெடுத்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதி களிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. தென்காசி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர பகுதிகள் மற்றும் கோவில்பட்டி, திருச் செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஜவுளி கடைகள் முன்பு திரளான மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

    இன்று விடுமுறையை யொட்டி காலை முதலே பொதுமக்கள் குடும்பத்தி னருடன் சென்று தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    Next Story
    ×