ஏர்வாடி அருகே மகளுடன் மாயமான பெண்

மூத்த மகள் இறந்ததால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார். நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஏர்வாடி அருகே மகளுடன் மாயமான பெண்
Published on

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 43). இவரது மனைவி வள்ளி செல்வம் (39). இவர்களது மூத்த மகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் வள்ளி செல்வம் மன விரக்தியில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வள்ளி செல்வத்திற்கும், நம்பிராஜ னுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நம்பிராஜன் வெளியே சென்று விட்டார். அதன்பின் நம்பிராஜன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வள்ளி செல்வத்தையும், அவரது 10 வயது மகளையும் காண வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான வள்ளி செல்வம் மற்றும் அவ ரது மகளை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com