வள்ளியூர் மரியா கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்தப்படம்.
விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்தப்படம்.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வணிக மேலாண்மையியல் துறை தலைவி ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com