என் மலர்
திருநெல்வேலி
- 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் இருந்தபடி மீனவர்கள் கடலில் மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் நேவிஸ் தவறி கடலுக்குள் விழுந்தார்.
அவரை உடனடியாக சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று தீவிரமாக தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவரை தேடும் பணியில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
- பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது.
- கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 38-வது வார்டு பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் ராமலட்சுமி, சின்னத்துரை, ஜெபமணி, நடராஜன், கந்தசாமி, நாராயணன், தங்கம், கோலப்பன், சுந்தரி, மகாராஜன் ஆகியோர் மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாளை சீனிவாசன் நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி தெருக்களில் பள்ளி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த கழிவு நீரின் வழியாகத்தான் சென்று வரும் நிலை உள்ளது. சீனிவாசன் நகர் பகுதியில் நாங்குநேரி சர்வீஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஆதித்தனார் 1-வது தெருவில் கழிவுநீர் ஓடை சரியான முறையில் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியை பார்வையிட்டு தாழ்வாக இருக்கும் கழிவு நீர் ஓடையை உயர்த்தி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகர் தனியார் மஹால் முதல் கோகுலம் நகர் அடுத்ததாக அமைந்துள்ள குளம் வரை ஓடையை நீட்டிப்பு செய்து சரியான முறையில் கழிவுநீர் ஓடை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- மேகா என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
- மணி என்பவர் ஆட்டோவில் டேனியல் உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் குறிச்சி வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் டேனியல் (வயது 28), மகள் ஜெயா (19).
புதுமணத்தம்பதி
அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முனியசாமி (22). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆகும். டேனியல், முனியசாமி உள்ளிட்டோர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஆக்ரா பகுதியை சேர்ந்த மேகா (27) என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் இருந்து அவர்கள் சென்னைக்கு ரெயிலில் வந்துள்ளனர். பின்னர் நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று அதிகாலை நெல்லைக்கு வந்தனர். அதன் பின்னர் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணி( 28) என்பவர் ஆட்டோவில் டேனியல், அவரது மனைவி மேகா, தங்கை ஜெயா, முனியசாமி உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.
மாடு மீது ஆட்டோ மோதல்
அப்போது பாளையங் கால்வாயை அடுத்த தனியார் விடுதி அருகே சாலையில் நடுவில் படுத்திருந்த மாடு மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முனியசாமி, டேனியல், ஜெயா, மேகா, மணிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது.
- வாடகை வாகன உரிமையாளர்களுக்கு புதிய வரி இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவரான நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த சந்தோசம் என்பவர் தலைமையில் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் காரணமாக வாடகை கார்கள், வேன்களின் ஆயுள் கால வரி, சாலை வரி மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன உரிமை யாளர்கள், டிரைவர்கள் பாதிக்கப்படு வதோடு பொதுமக்களையும் அது பாதிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக வாடகை வாகனங்களுக்கு இனி அதன் இன்வாய்ஸ் அடிப்படையில் மட்டுமே ஆயுள் கால வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது. ஆயுள் கால வரி மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் உரிமையாளர்கள் கடன்கள் பெற்று வாகனத்தை வாங்கி ஓட்டி வரும் நிலையில் இந்த புதிய வரி அவர்களுக்கு இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் பழைய வாகனத்திற்கான புதிய ஆயுட்கால வரி வாகனத்தை தொடக்கத்தில் வாங்கிய அதே தொகைக்கு கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும் என்று புதிய திருத்த சட்டம் கூறுவதால் எங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாடகை வாகனங்க ளுக்கான புதிய வரி உயர்வை ரத்து செய்து வாடகை வாகன உரிமை யாளர்கள், டிரை வர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
- மனமுடைந்த ஜெயபெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முனைஞ்சிபட்டியை அடுத்த காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபெருமாள் (வயது 50). விவசாயி.
இவருக்கு குருவம் மாள்(45) என்ற மனைவியும், சுடலை மணி (18) என்ற மகனும், முத்தரசி (16) என்ற மகளும் உள்ளனர். ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சரியாக பரா மரிக்காமலும் இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த ஜெயபெருமாள் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனிடையே இரவு வெகு நேரமாகியும் தந்தையை காணாததால் அவரது மகன் சுடலைமணி தோட்டத்திற்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது அருகில் விஷப்பாட்டிலுடன் ஜெயபெருமாள் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியி லேயே ஜெய பெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
- புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- நேற்று காலை முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
- சூட்டுப்பொத்தையில்முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார்.
வள்ளியூர்:
ெநல்லை மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி 110-வது குருபூஜை தேரோட்டத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. 5-ம் திருவிழாவான 22-ந் தேதி கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.
பரணி தீபம்
அதன் பின்னர் 23-ந் தேதி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜைநடைபெற்றது. 9- ம் திருவிழாவான நேற்று காலை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜித குரு மாதாஜி வித்தம்மா முன்னிலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் பரணிதீபத்தில் இருந்து சூட்டுப்பொத்தையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் அறங்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி கார்த்திகை தீபம் ஏற்றினார். பின்னர் மஹாமேரு மண்டபத்தில் சிறப்பு கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராஜம், பொன்பாண்டி, பாக்கியம், தி.மு.க விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆதி பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருகன் கோவில் கிழக்கு வாசல் முன்பு சொக்கபனை கொழுத்தப்பட்டது. திருக்கார்த்திகையை யொட்டி வள்ளியூரில் பல்வேறு வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
- தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).
இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.
எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.
- கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 50). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
கரையில் இருந்து சுமார் அரை நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனுக்கு வீசிய வலையை இழுத்த போது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை உடன் சென்றவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
- அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.'
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 107.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறில் 119.62 அடியும், மணிமுத்தாறில் 74.85 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 376 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்துள்ள வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் சிவகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் மழை குறைந்ததால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக வானம் பார்த்த பூமியான பல்வேறு இடங்களில் குளிர்ந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெண்டை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
தற்போது புதியம்புத்தூர் அருகே குப்பனாபுரம் பகுதியில் மக்காச்சோளப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு அதிக பலன் தரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். விரைவில் அவை அறுவடையாகும்.
- கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- கனமழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
நெல்லை:
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விறுவிறுப்பான விற்பனை
நெல்லை மாவட்டத்தின் பிரதான மொத்த மலர் சந்தையான நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட் வெல் பூ மார்க் கெட்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
விலை உயர்வு
குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் நெல்லை மாவட்டம் மானூர், அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதிகளில் இருந்தும் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம்.
தற்போது மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருந்தது. பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களின் காரணமாக பூக்களின் தேவை அதிகரிப்பு இருந்து வருவதால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகை பூ
அதன்படி நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு இன்று விற்பனையானது.
பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.






