search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rental Vehicles"

    • வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது.
    • வாடகை வாகன உரிமையாளர்களுக்கு புதிய வரி இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவரான நெல்லை ரெட்டியார்பட்டியை சேர்ந்த சந்தோசம் என்பவர் தலைமையில் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின் காரணமாக வாடகை கார்கள், வேன்களின் ஆயுள் கால வரி, சாலை வரி மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன உரிமை யாளர்கள், டிரைவர்கள் பாதிக்கப்படு வதோடு பொதுமக்களையும் அது பாதிக்கக் கூடியதாக உள்ளது.

    குறிப்பாக வாடகை வாகனங்களுக்கு இனி அதன் இன்வாய்ஸ் அடிப்படையில் மட்டுமே ஆயுள் கால வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் வாடகை வாகனங்கள் முன்பு போன்று காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த முடியாது. ஆயுள் கால வரி மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் உரிமையாளர்கள் கடன்கள் பெற்று வாகனத்தை வாங்கி ஓட்டி வரும் நிலையில் இந்த புதிய வரி அவர்களுக்கு இன்னும் சுமையை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் பழைய வாகனத்திற்கான புதிய ஆயுட்கால வரி வாகனத்தை தொடக்கத்தில் வாங்கிய அதே தொகைக்கு கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும் என்று புதிய திருத்த சட்டம் கூறுவதால் எங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும்.

    எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வாடகை வாகனங்க ளுக்கான புதிய வரி உயர்வை ரத்து செய்து வாடகை வாகன உரிமை யாளர்கள், டிரை வர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×