நெல்லை மண்டல புதிய தலைமை மின் பொறியாளர் பொறுப்பேற்பு

குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை மண்டல புதிய தலைமை மின் பொறியாளர் பொறுப்பேற்பு
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com