என் மலர்
திருநெல்வேலி
- ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- மக்களுக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் எங்கள் தலைவர் ராகுல்காந்தியை நேருக்குநேராக எதிர்கொள்ள முடியாத பாரதீய ஜனதா அரசு, பழிவாங்கும் போக்கோடு அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இருக்கிறது.
சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை, மத்திய பாரதீய ஜனதா அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை கட்டுப்படுத்த நினைத்து, இப்படியொரு ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தி இருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் இந்த மோடி அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசாங்கத்தின் முக்கியத் துறைகளான நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முன்பு இங்கே பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியைப் போல, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மோடி அரசின் இந்த செயல்களால் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு எதிராக எல்லோரும் திரும்பிக்கொண்டி ருக்கிறார்கள்.
இதையெல்லாம் திசைத்திருப்பவே ராகுல்காந்தி மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது மோடி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சி இன்னும் இன்னும் எழுச்சி பெறும்.
வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. பா.ஜனதா கட்சியின் வீழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தவறாகப் பயன்படுத்தி ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்து இருக்கிறார்கள். இது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மோடி அரசு விட்டுள்ள சவால்.
இந்தியாவில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையில் பா.ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.
இதற்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தருவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஆலங்குளத்துக்கு சுரேஷ்ராஜன் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை:
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் மற்றும் விளாத்திக்குளத்துக்கு தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுசாமி, கோவில்பட்டிக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செய லாளர் ஜோசப்ராஜ், திருச் செந்தூருக்கு விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, ஸ்ரீவை குண்டத்துக்கு சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் டாக்டர் சபி, ஓட்டப்பிடாரம் (தனி) விவசாய அணி துணை செயலாளர் முது குளத்தூர் முருகவேல் ஆகி யோர் தொகுதி பார்வையா ளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், வாசுதேவநல்லூர் (தனி) விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, கடையநல்லூர் தொண்டரணி துணை செய லாளர் ஆவின் ஆறுமுகம், தென்காசி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், ஆலங்குளத்துக்கு தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன் ஆகியோர் தொகுதி பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள னர்.
நெல்லை மாவட்டம், நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை மகளிரணி செய லாளர் ஹெலன் டேவிட்சன், அம்பை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செய லாளர் சிவராஜ், நாங்குநேரி மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டார்வின், ராதா புரம் வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி பார்வையாளராக நியமிக்கப் பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்குரிய மாவட்ட செயலாளருடன் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை செயல்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு தொகுதி யிலும் தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்த்து 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் 'உடன்பிறப்புகளாய் இணை வோம்' இயக்க பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இப்பணி விவரங்களை தலைமை கழகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மொத்தம் 16 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் கோபாலசமுத்திரம் தலைமை அலுவலகம் சார்பாக கடந்த 23-ந் தேதி தச்சநல்லூர் திருப்பாற்கடல் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான நலச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார் . கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். பகுதி பொறுப்பாளர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், ஜெபமணி, மரியமிக்கேல், ஜீவா அருள் முருகன் கோபால், ஆறுமுகத்தாய் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
- விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- சேக் அப்துல்லா,அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி விழா சேரன் மகாதேவி ஸ்காட் பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகா னந்தம் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.
சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து தலைமையுரையாற்றி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.
சேரன்மகாதேவி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை குமார் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.
சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பொது மேலாளர் தம்பிதுரை மற்றும் முதல்வர் ஜஸ்டின் திரவியம், நெல்லை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மாநில அரசு திட்டம்) ஜாய்லின் சோபியா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் பூவண்ணன், விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதாபாய், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்ற ளிப்புத்துறை உதவி இயக்குநர் ரெனால்டா ரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரி யர் மற்றும் தலைவர் ஆறுமுகசாமி, இணை பேராசிரியர்கள் ரஜினி மாலா, இளஞ்செழியன் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
இயற்கை விவசாயி சேக் அப்துல்லா மற்றும் அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
பாரம்பரிய பயிர்களை சந்தைப்படுத்துதல் குறித்து உள்ள விஸ்வநாதன் மற்றும் இயற்கை விவசாயி லெட்சுமி தேவி ஆகியோர் பேசினர்.
சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் நன்றி கூறினார்.
இக்கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய நெல் பயிர் ரகங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்த பதாகைகள், சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர்கள் மற்றும் விழப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டது.
மேலும் நெல் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கான ஏற்பாடு களை நெல்லை மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது
- நாங்குநேரி ரெயில் நிலையத்துக்கும், மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே 24½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது.
நெல்லை:
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் சென்னை- நெல்லை இடையே முழுமையாக மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்து ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
பணிகள் நிறைவு
நெல்லை-நாகர்கோவில் இடையே உள்ள பகுதியில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நாங்குநேரி முதல் வள்ளியூர் வழியாக ஆரல்வாய்மொழி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள நாங்கு நேரி- நெல்லை மற்றும் நாகர்கோ வில்- ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் நாங்குநேரி ரெயில் நிலையத்துக்கும், மேலப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே 24½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது.
ஆய்வு
இதற்காக மேலப்பா ளையம் ரெயில் நிலையம் கிராசிங் வசதியுடன் கூடிய 3 பிளாட்பாரங்கள், 4 தண்டவாளங்களுடன் கூடிய ரெயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பெங்களூரு தெற்கு பகுதி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனந்த் மதுக்கூர் சவுத்ரி இன்று நெல்லை வந்தார். அவருடன் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் வந்திருந்தார்.
பின்னர் மேலப்பா ளையம் ரெயில் நிலையம் சென்று அங்கு நடைபெற்றுள்ள பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு நாங்குநேரி ரெயில் நிலையம் வரை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இரட்டை ரெயில் பாதையில் மோட்டார் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினார்.
சோதனை ஓட்டம்
தொடர்ந்து இன்று மாலையில் நாங்குநேரியில் இருந்து தொடங்கி சந்திப்பு ரெயில்நிலையம் வரையிலும் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்கின்றனர்.
இதனையொட்டி நாங்குநேரியில் இருந்து சந்திப்பு ரெயில் நிலையம் வரை பொதுமக்கள் யாரும் சோதனை ஓட்டம் நடக்கும்போது வரவேண்டாம் என்று ரெயில்வே துறை எச்சரித்துள்ளது.
- பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பளுதூக்கும் விளையாட்டு குறித்த "பளுதூக்குதல் பற்றி விரிவான வழிகாட்டி" என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், புவி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பளுதூக்கும் விளையாட்டு போட்டிகளின் தேசிய நடுவரும், நெல்லை மாவட்ட பயிற்சியாளருமான ஆரோக்கியம் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் கலந்த கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுத்துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சேது நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் துரை செய்திருந்தார்.
- முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் சரஸ்வதி வேலை பார்த்து வந்தார்.
- சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் பாளை முருகன்குறிச்சியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வேலைக்கு வந்த சரஸ்வதி ஓட்டலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரஸ்வதி எப்படி உயிரிழந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சரஸ்வதி உயிரிழந்ததை அறிந்து அவரது உறவினர்கள், தமிழர் விடுதலைகளம் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, பாளை ஓட்டலில் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபட்டதாலேயே சரஸ்வதி உயிரிழந்துள்ளார். எனவே இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
- மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும்.
- விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிசான பருவத்தில் நடவு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில், 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி முடிந்துள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதார விலையாக முதல் ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,160-ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2,115-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை பெருக்கிட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 251 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 56 கிராம பஞ்சாயத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தென்னங் கன்றுகள், விசை தெளிப்பான் உள்ளிட்ட இடு பொருட்கள் ரூ.62 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெற வேண்டிய மழை அளவு 121.7 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 58.88 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த நீரினை பயன்படுத்தி நீர் மேலாண்மை முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய உத்திகளை கையாண்டு சாகுபடி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.
மாவட்டத்தில் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு இதுவரை 1,620 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 39 மாதிரிகள் தரமற்றதாக தெரிய வந்துள்ளது.
37 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்ட 57.76 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.77.50 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், சப்-கலெக்டர் சபிர் ஆலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அல்லாபிச்சை களக்காடு சென்று விட்டு பின்னர் ஊருக்கு மினி பஸ்சில் திரும்பினார்.
- சங்கர் என்ற சன்னியாசி, அல்லாபிச்சையை மது அருந்த அழைத்துள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு கள்ளிகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் அல்லாபிச்சை (45). விவசாயி.
சம்பவத்தன்று இவர் களக்காடு சென்று விட்டு பின்னர் ஊருக்கு மினி பஸ்சில் திரும்பினார். சத்திரங்கள்ளிகுளத்தில் மினி பஸ்சில் இருந்து இறங்கி வடக்கு கள்ளிகுளத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பேச்சி மகன் சங்கர் என்ற சன்னியாசி, அவரை மது அருந்த வருமாறு அழைத்தார். அதற்கு அல்லாபிச்சை தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மது அருந்த வர முடியாது என்று மறுத்தார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், அல்லாபிச்சையை மது பாட்டிலாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு கை விரல்கள், நெற்றி, காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்களும் சிதைந்தது.
மேலும் அவர் வைத்தி ருந்த ரூ.2 ஆயிரத்தையும் சங்கர் பறித்து சென்று விட்டார். இதையடுத்து படுகாயமடைந்த அல்லா பிச்சை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரை தேடி வருகின்றனர்.
- உஷா வீட்டில் பல்லவிளையை சேர்ந்த ஜெயா வேலைப்பார்த்து வந்தார்.
- கடந்த மாதமே ஜெயா உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள்மிக்கேல். இவரது மனைவி உஷா (வயது 68).
கொலை - கொள்ளை
கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த உஷா வீட்டில் பல்லவிளை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), அவரது உறவுக்கார சிறுவன் ஒருவன் ஆகிய 2 பேர் சேர்ந்து உஷாவை கொலை செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். போலீஸ் விசாரணையில் 2 பேரும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்குதற்காக உஷாவை கொலை செய்து நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.
பணிப்பெண் சிக்கினான்
இதையடுத்து ரஞ்சித், சிறுவன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களின் உறவினர்களான உதயபிரகாஷ், அவரது மனைவி சுபா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் பணிப்பெண் ஜெயாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உஷா வீட்டில் நடப்பதை நோட்டமிட்டு ஜெயா அவரது மகன் ரஞ்சித் மற்றும் கொலையில் ஈடுபட்ட சிறுவனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
1 மாதத்திற்கு முன்பே திட்டம்
இதன்படியே சம்பவத்தன்று அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமே ஜெயா மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர். இதற்காக ஜெயா வீட்டில் துப்புரவு பணி செய்த போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்துள்ளார். ஆனால் திடீரென உஷாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்ததால் கொள்ளையடிக்கும் திட்டம் நிறைவேறவில்லை.
இதற்கிடையே தங்களது வீட்டில் சி.சி.டி.வி. வயர்கள் துண்டிக்கப்பட்டது குறித்து தகவலறிந்து வெளிநாட்டில் வசித்து வரும் உஷாவின் மகன் போலீசில் புகார் செய்தார். அப்போது பணிப்பெண் ஜெயா மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2 பேர் கைது
இந்நிலையில் ஜெயா உள்ளிட்டவர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வீட்டை நோட்டமிடுவதற்காக தனது மகன் ரஞ்சித் மற்றும் மற்றொரு சிறுவனை உஷாவின் வீட்டிற்கு கூலி வேலைக்காக பணிப்பெண் ஜெயா அழைத்து சென்று சுற்றிக்காட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து பணிப்பெண் ஜெயா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரான இந்துஜூடன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனின் அண்ணணான ஜான்சன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.
- டி.பி. சோலார் நிறுவன கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
- மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.
நெல்லை:
தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டு தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் டி.பி. சோலார் நிறுவன (தி டாடா பவர் நிறுவனம்) கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.
இதில் டி.பி. சோலார் நிறுவன கட்டுமான பணியிடத்தின் 100 தொழிலாளர்கள், நெல்லை தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), டாடா புரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நிபுணர் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலா ளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழி லாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவரின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இத்தகவலை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சஜின் தெரிவித்தார்.






