நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.
கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பளுதூக்கும் விளையாட்டு குறித்த "பளுதூக்குதல் பற்றி விரிவான வழிகாட்டி" என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், புவி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் பளுதூக்கும் விளையாட்டு போட்டிகளின் தேசிய நடுவரும், நெல்லை மாவட்ட பயிற்சியாளருமான ஆரோக்கியம் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் கலந்த கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுத்துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சேது நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் துரை செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com